பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு விடுகிறேன் என்று கூறிச் சென்றவர், கார்காலம் வந்தும் தான் வரவில்லையே என மின்னும் கார்காலத்தில் வருந்துவது வழக்கம். பிரிவின்போது, திங்கள் கனலைக் கக்குவதாகவும், தென்றல் வெப்பத்தை வீசுவதாகவும், சந்தனம் முதலிய குளிர்ந்த பொருள்கள் மேலே படின் எரிவதாகவும் கூறும் இலக்கிய மரபிற்கு ஏற்ப, எரிந்து உயிர் நடுங்கிட எனக் கூறப்பட்டுள்ளது. மின்னல் என்றாலே மழையும் உண்டு என்பது தானே பெறப்படும். மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை என்பது பட்டறிந்த மொழியாயிற்றே. பிரிந்த பெண்டிரைப் போலவே பாம்பும் நடுங்குமாம். "இடியேறு உண்ட நாகம் போல’ என்ற உவமையைப் பல முறைபடித்தும் கேட்டும் இருக்கலாம். 'பார்க்கடல் பருகி மேகம் பாம்பினம்.பதைப்பமின்னி' என்பது.சீவக சிந்தாமணி மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் தோன்றுவதால், மின்னலுக்கு நடுங்குவதாகவோ-இடிக்கு இடிந்து போவ தாகவோ கூறினும்-இரண்டும் ஒன்றுதான். அசனி=இடி. பாம்புக்குக் கட்செவி என்னும் ஒரு பெயர் உண்டு; கட்செவி: கண்செலி. பாம்புக்குக் காது. இல்லை-அது கண்ணால் பார்ப்பதோடு கேட்பதும் செய்கிறது-அதாவது, கண்ணையே. கேட்கும் செவியாகவும் கொண்டுள்ளது என்னும் காரணம் பற்றிக் கட்செவி என்னும் பெயர் தரப் பட்டுள்ளதாம். பாம்பு கண்ணால் கேட்பது இல்லை என உயிரியல் அறிவியலில் கூறப்பட்டுள்ளது. பாம்பாட்டி மகுடி ஊதும்போது, புற்றுக்குள் ஏதோ ஒரு மாறுதலான சூழ்நிலை பாம்பாட்டிக் குழலின் ஒலியால் ஏற்படுகிறதாம். ஒலிக்கு அத்தகைய ஆற்றல் உண்டு என்பதை, வானொலி நிலையத்தில் உள்ள கருவியின் முன் பேசினால், அந்த ஒலி அலை, கருவியில் உள்ள மின்னலையோடு சேர்ந்து உலகம் முழுவதும் பரவுவதைக் கொண்டு தெளியலாம். வானில்