பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 179 மின்னலும் இடியும் தோன்றும் போது, புற்றுக்குள் உள்ள பாம்பின் உடலில் மாறுதல் ஏற்படுகிறது; அந்த மாறுதலைத் தான் எரிந்து உயிர் நடுங்கிட என்றார் ஆசிரியர். பாம்பாட்டியின் குழல் ஒலியால் ஏற்பட்ட சூழ்நிலை மாறுதலால் பாம்பு வெளியில் வந்து பார்க்கிறது; பாம்பாட்டி தலையை அசைத்துக் கொண்டே ஊதுவதைப் பார்த்துத் தானும் அசைக்கிறது-என்பதாக உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. இதைப் புரிந்து கொள்ளாதவர்களும் ஒத்துக் கொள்ளாதவர்களும் உளர். போர்க்களம்: சுழல் காற்றும் மின்னும் இடியும் கொண்ட வானம் ஒரு போர்க்களம் போன்று காணப்பட்டதாம். துகள்=துரசு. விசும்பு=விண். கொட்பு:சுழற்சி. தார்= காலாள் படை. பெரும் பணை=பெரிய முரசு. தழங்குதல் = ஒலித்தல். தா= வலிமை. உம்பர்-விண் - - "ஆர்த்தெழு துகள்விசும்பு அடைத்த லாம்லுமின் கூர்த்தெழு வாளெனப் பிறழும் கொட்பினும் தார்ப்பெரும் பணையின் விண்தழங்கு தாவினும் போர்பெருங் களமெனப் பொலிந்தது உம்பரே (14) போர்க்களத்தில், படைகளின் இயக்கத்தால் தூசு விண்ணுற எழும். வாள்கள் பளிச்சு-பளிச்சென வீசப்படும். பெரிய போர்முரசுகள் கொட்டப்படும். அவ்வாறே, இங்கேயும், காற்றடிப்பதால் தூசு விண்ணுற எழுகிறது. வாள்களின் சுழற்சிபோல் மின்னல் சுழலுகிறது. போர் முரசங்கள் போல் இடி இடிக்கிறது. இந்த வகைளில், இராமன் தங்கியுள்ள இடம், மழைக்காலத்தில் போர்க்களம் போல் தோன்றிற்றாம்.