பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கிட்கிந்தா காண்டத் - தி றனாய்வு கூத்து அரங்கம் சோலையில் ஒரு நடன அரங்கு நிகழ்கின்றது: 'மூங்கிலைத்துளைத்து ஊதும் வண்டின் ஒலி கின்னர யாழ் போன்றிருந்ததாம். மின்னி இடிக்கும் முகிலின் முழக்கம் மத்தளம் (மிருதங்கம்) அடிப்பது போன்றதாம். மயில் மங்கையர்களைப் போல் ஆடியதாம். தோன்றிகள் (செங்காந்தள்) அரங்கிலே ஏற்றிய விளக்கை ஒத்து இருந்தனவாம். கருவிளைப்பூக்கள் காண்பவரின் கண்களை நிகர்த்து இருந்தனவாம். . . . 'கிளைத்துளை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த, மின்னும் துளிக்குரல் மேகம் வள்வார்த் தூரியம் துவைப்ப போன்ற வளைக்கையர் போன்ற மஞ்ஞை, தோன்றிகள் அரங்கின் மாடே விளக்கினம் ஒத்த, காண்போர் விழிஒத்த விளையின் மென்பூ' (32) மழலை = இனிய ஒலி, கின்னரம் = ஒரு வகை யாழ். தூரியம்=மத்தளம். வளைக்கையர்=பெண்கள். மஞ்ஞை = மயில். தோன்றி- செங்காந்தள். விள்ை = கருவிளை. இப்படி ஒரு நடன அரங்கைப் புனைந்துரைப்பதில் புலவர்கட்குக் கொள்ளை விருப்பம் உண்டு. கம்பரோ பேராவல் கொண்டவர். பால காண்டத்தில் "தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளை கண்விழித்து நோக்கத் தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ'