பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 181 என ஒர் அரங்கம் நடத்தியது போதாது என, இந்தக் காண்டத்திலும் நமக்கு ஒரு நடன அரங்கம் காண்பித் துள்ளார். - - கம்பர் மட்டுமா? கபிலர் இளைத்தவரா என்ன? அக நானூற்றுப் பாடல் ஒன்றில் அழகிய அரங்கம் அமைத்துக் காட்டியுள்ளார். அது. "ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின் கோடை யவ்வளிக் குழலிசை யாகப் பாடு இன்னருவிப் பனிநீரின் விசைத் தோடமை முழவின் துதைக் குரலாகக் கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து மந்தி கல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத்து இயலி ஆடுமயில் கனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்” (82:1-10) என்பது. கபிலரது அரங்கம் மிகப் பெரியது. சாத்தனாரும் மணிமேகலை - பளிக்கறை புக்க காதையில், "குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் கல்யாழ் செய்ய வெயில் நுழைபறியாக் குயில்நுழை பொதும்பர் மயிலாடு அரங்கின் மந்தி காண்பனகாண்' (3-6) என்று தமது அரங்கத்தை அமைத்துள்ளார். அம்பிகாபதி காதல் காப்பியம் என்னும் நூலிலும் "ஓடும் ஓடைநீர் ஒலிக்க முழவென, பாடும்புள் பூவை பரப்ப இசையினை, ஆடும் மயிலின் ஆட்டம் சுவைத்தனர்" (15:55-57) எனக் கம்பரும் அவர் நண்பரும் ஒடையின் பக்கம் நின்று கண்டு சுவைத்ததாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளது.