பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு மேலே ஐந்து ஆடு அரங்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஐந்திலும் ஆடுவது மயில் தான். நான்கு அரங்குகளில் யாழ் வண்டுதான். இரண்டில் முகில் முழவு. வேறு இரண்டில் ஒடும் நீர் ஒலி முழவு. இரண்டில் காண்பவர்கள் (Audience) குரங்குகள். கம்பர் மட்டும் இரண்டு இடங்களிலும் விளக்குப் போட்டுள்ளார். பால காண்டத்தில் தாமரை விளக்காகவும் இந்தக் கிட்கிந்தாப் பாடலில் தோன்றி விளக்காகவும் கம்பரால் ஏற்றிக் காட்டப்பட்டுள்ளன. வெளிச்சம் இன்றியமையாத தல்லவா? இந்தப் பாடலில், நிகர்த்த, போன்ற, போன்ற, ஒத்த, ஒத்த - என்னும் ஐந்து சொற்களும் ஒரே பொருளில் பின் பின்னே வந்துள்ளன. போன்ற என்ற ஒரே சொல் இரண்டு முறையும், ஒத்த என்ற ஒரே சொல்லும் இரண்டு முறையும் பின் பின்னே வந்துள்ளன. இந்த அமைப்பு சொல் பொருள் பின்வரும் நிலை அணி' எனப்படும். நவ்வியின் ஊடல் பூக்கள் நிறைந்த காடுகளில் வண்டுகளால் சூழப்பட்டுத் தேன் உடையனவாகிச் செருக்குடன் காமச்செவ்வி (காம உணர்வு) பெற்றனவாய் உள்ள மரங்கள் கத்துரி மானின் மணம் உடையனவாய் இருக்கும். அம்மரங்களில் உராயும் ஆண் கலைமான்களின் மேல் கத்துரி மானின் வாடை வீசும். அவ்வாடையை அறிந்த பெண் நவ்விமான், தன் இணையான (ஜோடியான) கலைமான் கத்துாரிப் பெண்மானுடன் கூடிவிட்டு வந்ததாக அதனோடு ஊடல் கொள்ளுமாம். - "பூவியல் புறவம் எங்கும் பொறிவரி வண்டுபோர்ப்பத் தீவிய களிய வாகிச் செருக்கிய காமச் செவ்வி