பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 183 ஒவலில் மரங்கள் தோறும் உரைத்து அறஉறிஞ்சி ஒண்கேழ் நாவிய செவ்வி நாறக் கலையொடும் புலந்தநவ்வி' (35) 4=794 களியவாகி =களிப்புடையன வாகி-தேன் (கள்) உடையனவாகி. ஒவல் இல் = நீங்குதல் இல்லாத. காமச் செவ்வி = காம உணர்வு. நாவிய செவ்வி க நாவி என்னும் கத்துரி மானின் மணவாடை. கலை - ஆண்மான். நவ்வி - பெண்மான். புலத்தல் = ஊடல் கொள்ளுதல். ஓரறிவு உயிரெனத் தாழ்வாகச் சொல்லப்படும் மரம் செடி கொடி புல் பூண்டு ஆகிய மர இனம் ஒவ்வொன்றிலும் ஆண் - பெண் உண்டு. ஒரு செடியின் ஒரு பூவிலேயே ஆண் பாகமும் பெண்பாகமும் இருக்கும் இனமும் உண்டு. ஒரு செடியிலேயே ஆண் பூவும் பெண் பூவும் தனித்தனியாய் இருக்கும் இனமும் உண்டு. ஆண்மரம் - பெண்மரம் என்பன போல் தனித்தனியாக இருக்கும் இனமும் உண்டு. ஆண் பூவில் உள்ள மகரந்தப்பொடி பெண்பூவிற்குள் வந்து சேர்ந்தால் பூ கருவுற்றுக் காய்க்கும், காற்று, வண்டு முதலியவற்றால் ஆண்மகரந்தப்பொடி பெண்பூவிற்குள் வந்து கலக்கும். மலர்கள் மணமும் கவர்ச்சியான நிறமும் உடையனவாய் இருப்பதன் காரணம், வண்டுகளை மயக்கித் தம்பால் ஈர்ப்பதற்கே யாகும். இதனை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் - "மஞ்சள் குளித்து முகம் மினுக்கி இந்த மாயப் பொடி வீசி நிற்கும் நிலை' என்னும் சூரிய காந்தியைப் பற்றிய பாடலால் அறியலாம். மேலும், மலர்கள் கூறுவதுபோல் அவள் பாடியுள்ள 'வண்டின் வரவு எதிர்ப் பார்த்திருப்போம் - நல்ல வாசமும் வீசி கிற்போம்'