பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு என்னும் பாடலாலும் அறியலாம். இருள் தொடங்கும் மாலையில் பூக்கும் பூக்கள் நல்ல மணத்துடன் வெண்மையா யிருப்பதற்குக் காரணம்: இருட்டில் வெண்மையாயிருந்தால் தானே வண்டின் கண்கட்குத் தெரியும். வண்டுகட்குத் தெரிந்தால்தான் அவற்றின் வாயிலாக மகரந்தச் சேர்க்கை பெற்று மர இனம் காய்க்கும். இதனை, சுந்தரம்பிள்ளை மனோன் மணியம் என்னும் நூலில் (மூன்றாம் அங்கம்-நான் காம் களம்.) “... ... ... கிசி அலர் மலர்க்கு வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல் எவ்வணம் அவற்றின் இட்ட நாயகராம்: ஈயினம் அறிந்து வந்து எய்திடும்? அங்ங்ணம் மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்” எனக் கூறியிருப்பதைக் கொண்டும் அறியலாம். நெல் பயிரின் நுனியில் நெல்மணி காய்ப்பதன் காரணம், அது அடர்த்தியாயிருப்பதால் வண்டு நடுவில் சென்று மரந்தச் சேர்க்கை உண்டாக்க முடியவில்லை-மேலேதான் செய்ய முடிகின்றது. (இது பற்றி எனது இன்பவாழ்வு’ என்னும் பாலியல் நூலில் விரிவாகக் காணலாம்) எனவேதான், காமச்செவ்வி உடைய மரத்தில் ஒருவித மான வாடை இருக்கும்; அதில் உராய்ந்த கலைமானின் மேலும் அந்த வாடை வீசுதலால், அது வேறு ஒன்றுடன் கூடிவந்ததாக நவ்விமான் ஊடல் கொண்டதாம். நயமான சுவையான கற்பனை இது. உரு மாற்றம் சீதையைப் பிரிந்ததால் வருந்தும் இராமன் வாடைக் காற்று வீசும் போது மிகவும் கலங்கி, எமன் வாடைக் காற்றின் உருவத்தில் வந்தானோ? இவ்வாறு வேண்டுவோர் வேண்டிய உருவம் கொள்ளும்படியான வாய்ப்புக் கிடைத் திருப்பதை என்னென்பது-என்று கூறினானாம்.