பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 185 "ஓடைவாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி நாடி மாரீசனார் ஓர் ஆடக கவ்வி யானார் வாடையாய்க் கூற்றி னாரும் உருவினை மாற்றி வந்தார் கேடுகுழ் வார்க்கும் வேண்டும் உருக்கொளக் கிடைத்த அன்றே (60) ஒடை = நெற்றிப்பட்டம், நுதலினாள் = சீதை. ஆடக நவ்வி = பொன்மான். மாரீசன் சீதையைச் கவரும் கெட்ட எண்ணத்துடன் பொன்மானாய் உருமாறி வந்தான். எமனும் என்னைக் கொல்லும் கெட்ட எண்ணத்துடன் வாடைக் காற்றின் உருவில் வந்திருக்கிறான் போலும். நல்ல செயலுக்காக மாற்றுருவம் கொள்ளினும் கொள்ள லாம். ஆனால் கேடு சூழ்வார்க்கு இந்த வாய்ப்பு கிடைக் கலாமா-என்கிறான். மாரீசனார்-கூற்றினார் என்பவற்றில் 'உள்ள ஆர் விகுதி உயர்ச்சிக் குறிப்பன்று, குத்தலாகக் கிண்டல் செய்யும் இகழ்ச்சிக் குறிப்பாகும். இங்கே குறுந் தொகையில் உள்ள 'யாது செய்வாங் கொல் தோழி நோதக நீர் எதிர்கருவிய கார் எதிர்கிளை மழை ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய கூதிர் உருவில் கூற்றம் காதலர்ப் பிரிந்த என் குறித்து வருமே" (197) என்னும் பாடலும், "பண்டறியேன் கூற்று என்பதனை இனியறிந்தேன் பெண்தகையால் பேரமர்க் கட்டு’ (1083) என்னும் குறட்பாவும் ஒப்புநோக்கத்தக்கன. நெரித்த புருவம் - மறை, மதி, வான், கடல், நிலம் ஆகியவை மாறுபடினும் மாறாத கலங்காத திண்மையுடைய அண்ணா! நின் புருவத்தை நெரித்தால் போதும்-அந்த அரக்கர் பெருமை