பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 15 என்னும் நூலில் பொய்யா மொழிப் புலவர் அறிமுகம் செய்துள்ளார்: காதலியின் கனிவாய்ச் சுவையை உண்டு களித்த காதலன் கூறுகிறான்; ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் இனிமை பயக்கும் தமிழ் போன்று, இவள் செங்கனிவாயை நுகருந்தோறும் நுகருந்தோறும் இனிதாகி அமிழ்தச் சுவை பயக்கிறது என்கிறான். "தேருக்தொறும் இனிதாங் தமிழ்போன்று இவள் செங்கனிவாய் ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே' (59) என்பது பாடல் மிகுதி. பொய்யா மொழிப் புலவரின் பாடலில், மகளிரின் இதழ் நீருக்குத் தமிழ் உவமையாக்கப்பட்டது. ஆனால், மகளிரின் இதழ் நீரைக் காட்டிலும் பொய்கை நீர் மிக்க இனிமை உடையது எனக் கம்பர் பாடல் கூறுகிறது. வடக்கு வேடன்தாங்கல் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடன்தாங்கல் என்னும் ஊரில் உள்ள ஏரியின் நடுவில் கடப்ப மரங்கள் பல உள்ளன. இரழ்சியா உட்பட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் வேடன்தாங்கலுக்கு வந்து தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதுண்டு என்பதை நாம் அறிவோம். பறவைகள் ஒரே இனத்தின அல்ல. பறவைகட்கும் மொழி உண்டு என்பதைக் கழறிற்று அறிவார் நாயனார் வரலாற்றால் அறியலாம். அவ்வளவு ஏன்? நாம் வளர்க்கும் நம் வீட்டுக் கிளி, நம்மைப் போலவே மொழி பேசுவதை நாம் அறிவோம். பூவை என்னும் நாகணவாய்ப் புள்ளும் அன்னதே. ஒரே இனப் பறவைகள் தமக்குள் எழுப்புகின்ற