பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கிட்கிந்தா காண்டத் திறனாயவு நிலை குலைந்து விடும்-என்று இலக்குவன் இராமனுக்குத் தேறுதல் மொழி புகல்கிறான், 'மறை துனங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ்கடல் வையமும் நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்வயின் நிற்குமோ பிறை துளங்குவ அனையபேர் எயிறு உடைய பேதையர் பெருமைகின் இறை துளங்குறு புருவ மென்சிலை இடை துளங்குற இசையுமோ” (66) பிறை நிலாவைப் போன்ற கொடிய கோரைப்பற்களை உடைய பேதையர் = அறிவில்லா அரக்கர்கள். அண்ணா! நீ உன்கையில் உள்ள வில்லை அசைக்க வேண்டியதில்லை; உன் புருவமாகிய வில்லைச் சிறிது நெரித்தாலே போதும்அரக்கர் அழிவர் என்கிறான். அவர் தலையசைத்தால் போதும் என்றும், அவர் கை அசைத்தால் போதும் என்றும், அவர் சுண்டி விரலை அசைத் தால் போதும் என்றும், அவர் கண் அசைத்தால் போதும் என்றும் உலகியலில் பலவாறு பகர்வது பழக்கம். ஆனால், இங்கே, இலக்குவன், இராமன் புருவத்தை நெரித்தால் போதும் என்கிறான். இது ஒரு சுவையான கருத்து வெளிப் பாடாகும். தலைவியை எண்ணிச் சோர்ந்து போன தலைவனை நோக்கி, எதற்கும் கலங்காத நீ இதற்குக் கலங்கலாமா என்று பாங்கன் தேற்றுதலாக ஒரு பாடல் திருக்கோவையாரில் உள்ளது. அது: விலங்கலைக் கால் விண்டு மேன்மேல்இட விண்ணும் மண்ணும் முந்நீர்க் கலங்கலைச் சென்ற அன்றும் கலங்கலாய் கமழ் கொன்றை துன்றும்