பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 187 அலங்கலைச் சூழ்ந்த சிற்றம் பலத்தான் அருள் இல்லவர் போல் துலங்கைைச் சென்றி தென்னோ வள்ளல் உள்ளம் துயர் கின்றதே (24) என்னும் பாடல். இது கம்பர் பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது. கூதிர் கால வரவு இது காறும் கார்காலம் தொடர்பான செய்திகள் மேலே கூறப்பட்டன. இனிக்கூதிர் காலம் பற்றிய செய்திகள் இடம் பெறும். கார்காலத்தால் ஆய துயரைப் பொறுக்க முடியாமல் வருந்திய இராமன், தம்பி இலக்குவனின் தேறுதல் மொழி யால் ஒரு சிறிது தெளிவு பெற்றிருக்கும் வேளையில், முன் வினையால் வந்த ஒரு பிணியால் வருந்திக்கொண்டிருக்கும் போது மேலும் ஒரு பிணி வந்து சேர்ந்து கொண்டதுபோல் கூதிர் காலம் வந்ததாம். ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர்ப் பருவ காலத் திங்களாம்.

"சொற்ற தம்பிஉரைக்கு உணர்ந்து உயிர் சோர் வொடுங்கிய தொல்லையோன் இற்ற இன்னல் இயக்கம் எய்திட வைகல் பற்பழி ஏகமேல் உற்று கின்றவினைக் கொடும்பிணி ஒன்றின்மேல் உடன் ஒன்று உராய் மற்று வெம்பிணி பற்றினா லென வந்து எதிர்ந்தது மாரியே’’ (70) தொல்லையோன் = உலகின் முற்பட்ட தெய்வமாகிய திருமாலின் பிறப்பாகிய இராமன். இதற்கு, தொல்லையான சூழ்நிலையில் உள்ள இராமன் என்றும் பொருள் கூறலாமே. கார்காலத்தைக் கடக்க அறுபது நாள்கள் போதும்.