பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஆவணியும் புரட்டாசியும் கார்காலமாகும். இந்த இரண்டு திங்கள் காலத்தைக் கடப்பது கடினமன்று. ஆனால் இராமனுக்கு மிகப் பல நாள்கள் ஆனது போல் இருந்ததாம் என்பது, வைகல் பற்பல ஏக என்பதால் அறியக் கிடக்கிறது. ஒரு பிணிக்கு மேல் இன்னொரு பிணியும் தொடரின் நிலைமை என்னாகும்? இங்கே, பட்ட காலே படும் - கெட்ட குடியே கெடும் என்னும் பட்டறிந்த முதுமொழி எண்ணத் தக்கது. காலில் ஒரு புண் மட்டும் இருந்தால் பொறுத்துக் கொள்ளலாம்; அந்தப் புண்ணே மற்றொரு முறை இடிபட்டால் என்ன ஆகும்? ஒரு புண்ணும் இல்லாமல் இடிபட்டால் அவ் வளவாய்த் துன்பம் தோன்றாது. கெட்ட குடியே கெடும் என்பதையும் இவ்வாறே கொள்ளல் வேண்டும். பட்ட காலே பட்டது போலவும் கெட்ட குடியே கெட்டது போலவும், கார்காலத்தால் துன்பம் உற்ற இராமனுக்குத் துன்பம் தரும் கூதிர்காலமும் தொடர்ந்து வந்ததாம். மாரி, என்பதற்குக் கூதிர்காலம் எனப்பொருள் கொள்ளல் வேண்டும். கூதிர்காலமாகிய ஐப்பசி-கார்த்திகைத் திங்கள் களில்தான் மழை (மாரி) மிகுதியாதலின், கூதிர்காலம் மாரி எனப்பட்டது. நாழிகை வட்டில் மழை நிரம்பப் பெய்வதால் கடல் நிறைவுற்றது. ஞாயிற்றின் வெப்ப ஆட்சி நிலைகுலைந்தது. வானம் முழுவதும் முகில் மண்டியிருப்பதால் ஞாயிற்றின் வெயில் வெளிப்படாததால், காலை நேரம் எது - மாலை நேரம் எது என்பதைக் கன்னல் கருவியால்தான் அறியமுடியும் - வேறெதாலும் இயலாது.