பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 189 'வேலை நிறைவுற்றன, வெயில்கதிர் வெதுப்பும் சீலம் அழிவுற்ற, புனலுற்று உருவு செப்பின் காலம் அறிவுற் றுணர்தல் கன்னல் அளவல்லால் மாலைபகல் உற்றதென ஒர்வரிது மாதோ!" (73) வேலை = கடல்; செப்பு = கொப்பரைக் குடம். கன்னல் = நாழிகை வட்டில். - வேலை நிறைவுற்றன எனில், இதற்கு முன் வேலை குறைவாக இருந்ததா என்ற வினா எழும். ஆம்! கடல் நீர் ஆவியாக (நீராவியாக) மாறி மேலே சென்று முகில் உருவடைவதால் கடல்நீர் குறையத்தானே செய்யும். இங்கே, "நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிக்தெழிலி தான்கல்கா தாகி விடின்' (17) என்னும் குறட்பா ஒப்புநோக்கற்பாற்று. கடல்நீர் முகிலாக மாறுவதால் மீண்டும் மேலே இருந்து மழைபொழிய நேரடியாகவும் ஆறுகளின் வழியாகவும் குறைந்த நீர் மீண்டும் ஈடுகட்டப்படுகின்றது. ஈண்டு, "கடல்குறை படுத்தநீர் கல்குறைபட எறிந்து' (20-1) என்னும் பரிபாடல் பகுதி காண்க. ஆவியாக மாறியதால் கடல் அளவைக் குறை வுடையதாக்கிய நீர், மீண்டும் மழையாக மாறிக் கருங் கல்லும் துளைபடும்படிக் கடுமையாகப் பெய்வதால் ஈடு கட்டப்படுகிறது என்பதை இதனால் அறியலாம். மற்றும், மதுரைக் காஞ்சியில் உள்ள 'மழைகொளக் குறையாது புனல்புக மிகாது கரைபொருது இரங்கும் முந்நீர்' (424) என்னும் பகுதியும் ஈண்டுக் காணத்தக்கது. மழை முகில் நீராவியாகக் கொள்வதால் குறைவு ஆகாதபடி, புதுப்புனல் மேலிருந்தும் கீழ் உள்ள ஆறுகளின் வாயிலாகவும் நிறைவு