பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு செய்கிறதாம். புதுப்புனல் புகுவதால் கடல்நீர் அளவு மீறவும் இல்லையாம் - ஏனெனில், நீராவியாகக் குறைந்து கொண்டே இருப்பதால் - என்க. ஆகச் செலவும் வரவும் சமனாக உள்ளன. மதுரைக் காஞ்சியில் கடல் முந்நீர் என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. ஊற்றுநீர், ஆற்றுநீர், வேற்று நீராகிய மழைநீர் ஆகிய மூவகையான நீர் கிடைப்பதால் முந்நீர் என்னும் பெயர் ஏற்பட்டதாகப் பலரும் விளக்கம் கூறு கின்றனர். எல்லா நீர்நிலைகட்குமே ஊற்று நீரும் மழை நீரும் கிடைப்பதாலும், சில ஏரிகட்கு இவ்விருவகை நீரோடு ஆற்று நீரும் கிடைப்பதாலும் இப்பெயர்க் காரணம் பொருந்தாது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில் தன்மை உடையதால் முந்நீர் என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். ஏன்? தமிழ்நாட்டின் முன்று பக்கங்களிலும் - அதாவது கிழக்கே வங்கக் கடலும் தெற்கே இந்து மா கடலும் மேற்கே அரபிக்கடலும் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கொள்ளக் கூடாதா? இம்மூன்று கடல் பெயர்களும் பிற்காலத்தில் ஏற்பட்டவை யெனினும், முற்காலத்திலேயே மூன்று பக்கமும் கடல் இருந்தது உண்மைதானே? பல கடல்களும் நிறைவுற்றதால்தான், வேலை நிறை வுற்றன எனப் பன்மை முடிபு கொடுத்துள்ளார் ஆசிரியர். வேலை என்பது பால் பகா அஃறிணைப் பெயர். இது ஒருமை - பன்மை இரண்டையும் குறிக்கும். இனிக் கன்னலைக் காண்போம். நீர் நிரம்பிய ஒரு பெரிய கொப்பரைக் குடத்தில், குறிப்பிட்ட கொள்ளளவு உடையதும் நடுவில் சிறு துளை உள்ளதுமாகிய ஒரு சிறிய வட்டிலை (ஒரு கலத்தை) இடுவர். அந்த வட்டில், துளை வழியாக நீர் புகுந்து நிறைந்தால், ஒரு நாழிகை ஆயிற்று