பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் -> 191 எனக் கணக்கிடுவர். இரண்டரை நாழிகை கொண்டது ஒரு மணி நேரமாகும் - அதாவது அறுபது மணித்துளி (60 நிமிடம்) கொண்ட நேரமாகும். ஒரு நாழிகை என்பது 24 மணித்துளி (நிமிடம்) ஆகும். துளையுடைய வட்டில் ஐந்து முறை நிறைந்தால் இரண்டு மணியாகும்; 60 முறை நிறைந் தால் 24 மணி கொண்ட ஒரு நாளாகும். இந்தக் காலக் கடிகையாரம் வருவதற்கு முன், கன்னல் வாயிலாகவே அக் காலத்தில் காலக் கணக்கு அறிந்து வந்தனர் நம் முன்னோர். கம்பர் காலத்திலும் இம்முறையே இருந்தது. “கன்னலின் யாமம் கொள்வோர் (7:65) என்பது மணிமேகலைப் பாடல் பகுதி. "காவதம் ஒரொரு கன்னலினாக' (மார்க். 142) என்பது கந்த புராணப் பாடல் பகுதி. 'குறுநீர்க் கன்னல் எண்ணுதல் அல்லது, கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர” (43:6,7) என்பது அகநானூறு. 'குறு நீர்க் கன்னலின் இனைத்து என்று இசைப்ப” (58) என்பது முல்லைப் பாட்டு. - . எனவே, இராமனை வருத்திய கூதிர் காலத்தில் காலை, நண்பகல், மாலை என்பனவற்றைக் கன்னல் கொண்டே அறிய முடிந்தது - என்பது கருத்தாகும். . கூதிர் முடிவு கூதிர் காலம் முடியும் காலம் நெருங்கிற்று. உலகில் உள்ளவர்கட் கெல்லாம் பெருங் கொடை புரிந்ததால் வறிய நிலையில் இருக்கும்போது, வந்து கேட்போர்க்கு ஒன்றும் கொடுக்க முடியாததால் முகம் வெளுத்துப் போன வள்ளலைப் போல, பொழிந்து தள்ளிய முகில் இப்போது வெளுக்கத் தொடங்கி விட்டது. "மள்கலில் பெருங்கொடை மருவி மண்ணுளோர் உள்கிய பொருளெலாம் உதவி அற்றபோது எள்கலில் இரவலர்க்கு. ஈவது. இன்மையால் வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே (104)