பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு மள்கல் இல் = குறைவது இல்லாத, உள்கிய = பெற எண்ணிய, எள்கல் இல் = இகழ்ச்சி இல்லாத - பெருந்தன்மை கொண்ட, இரவலர் = உதவி கேட்பவர். வெள்கிய = நாணம் கொண்ட. • உயரிய பண்பாளர் பிறர்க்கு உதவ முடியாத போது மிகவும் வருந்துவர் - நாணம் கொள்வர் - முகம் வெளுத்துப் போவர் . இவர் போலவே நீர் தந்த முகில் வெளுத்து விட்டதாம். இங்கே, - "இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு' (224) "சாதலின் இன்னாத தில்லை இனிததுஉம் ஈதல் இயையாக் கடை' (230) என்னும் குறட்பாக்களும், கலித்தொகையில் உள்ள "இன்மை உரைத்தார்க்கு அதுகிரைக்க லாற்றாக்கால் தன்மெய் துறப்பான் மலை” (43 : 26, 27) என்னும் பாடல் பகுதியும் இணைத்து ஒப்பு நோக்கத் தக்கன. இப்பாடல்கள் மிக உயர்ந்த மக்கட் பண்பைப் பறை சாற்றுகின்றன. - மாரிப் பேர் இருள் பிறவிக்கு ஏதுவாகிய நல்வினை தீவினை என்னும் இரு வினைக்ளாகிய பேய்ப் பிடியினின்றும் விடுபட்டு மெய்யுணர்வு (மெய்ஞ்ஞானம்) பெற்றவர்களை விட்டு நீங்கிய அஞ்ஞான மாகிய மாயையைப் போல் கூதிர்ப் பருவ இருள் அகன்ற தாம். "தீவினை கல்வினை என்னத் தேற்றிய பேய்வினைப் பொருள்தனை அறிந்து பெற்றதோர் ஆய்வினை மெய்யுணர்வு அணுக, ஆசுறும் மாயையின் மாய்ந்தது மாரிப் பேர்இருள்” (105)