பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 193 தீவினைதான் கூடாது - அதுபோல் நல் வினையும் கூடாதா எனின், பயன் கருதியும் பிறரை வருத்திக் கவர்ந்தும் செய்கின்ற நல்வினை கூடாது தானே. கடைத் தேங்காயைத் திருடி வழிப் பிள்ளையார்க்கு உடைப்பதும், மாட்டைக் கொன்று அதன் தோலால் செருப்பு செய்து தானம் வழங்கு வதும் நல்வினைகளாகுமா? இதனால்தான் தீவினை நல் வினை இரண்டுமே பேய் வினை எனப்பட்டன. ஈண்டு, "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (5) என்னும் குறள் எண்ணத்தக்கது. சில பதிப்புகளில் மூன்றாம் அடியின் இறுதியில் ஆசறும் என்ற பாடம் உள்ளது. இவ்வாறு இருப்பின், ஆசு அறும் மாயை' என்பதற்குக் குற்றம் அற்ற மாயை என்று பொருள் செய்து, அதைச் சரிக் கட்டுவதற்கு என்னென்னவோ பொருந்தா விளக்கம் தர வேண்டியுள்ளது. அதனால், ஆசுறும் என்ற பாடம் யான் கொண்டுள்ளேன். ஆசு உறும் மாயை' என்று பாடம் கொள்ளின், குற்றம் உள்ள மாயை என எளிதில் உண்மைப் பொருள் கொள்ளலாம், - மாயை என்பது வட சொல் என்பது பெரும்பாலார் கருத்து. அது தமிழ்ச் சொல் என்று சிலர் கூறுவர். அதற்கு ஏற்றாற்போல், மாயையின் மாய்ந்தது என்னும் தொடர் இயற்கையாய் அமைந்துள்ளது; அதாவது, மாய்வது மாயை என்று சொல்ல இடம் தருவதாக உள்ளது. இந்தக் கருத்து முற்ற முடிந்த முடிபு அன்று; மேலும் ஆய்வுக்கு உரியது. வாரி அறல் கிடைத்த செல்வத்தைத் தீநெறியில் செலவு செய்த வனிடமிருந்து அச் செல்வம் நீங்கி விடுவது போல, மலை மேல் நின்று நீரைப் பொழிந்த முகில் நீங்கியதால், மலையி லிருந்து புறப்படும் ஆறுகள் நீர் வற்றிப் போயின;