பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 'மேகம்மா மலைகளின் புறத்து வீதலால் மாகயாறு யாவையும் வாரி அற்றன ஆகையால் தகவிழந்து அழிவில் நன்பொருள் போகஆறு ஒழுகலான் செல்வம் போலவே' (108) வீதல்=நீங்குதல் வாரி= நீர். ஆகையால்=செல்வம் மிகுதியாக ஆனதால். அழிவில்பொருள்=நல்லோரிடம் இருப்பின் என்றும் அழியாப் பொருள்-என்றும் அழியக் கூடாதபொருள். நன்பொருள்= (தீய வழியில் வந்த பொருள் அழியினும் அழியலாம்; ஆனால்,) முன்னோர் நல்ல வழியில் ஈட்டி நல்லன செய்வதற்காக வைத்து விட்டுப் போன பொருள். ஆறு ஒழுகலான்= நல்ல வழியில் நடவாதவன். “நின்று தின்றால் குன்றும் மாளும்’ என்பது பட்டறிந்த முதுமொழியாகும். மேலும் வருவாய் இல்லாமல், வீண்செலவும் செய்யாமல், சிறுகச் சிறுக உண்டு கொண்டிருந்தாலும், குன்று போன்ற பெரிய செல்வமும் அழிந்து போகும். உண்மை இவ்வா றிருக்க, மேற்கொண்டு மிகுதியாக வீண் செலவு செய்யின் பெரிய செல்வமும் அழிவதற்குச் சொல்லவா வேண்டும்? 'தகவு இழந்து' என்பது, மேலலார் செல்வமே போல் தலை நிறுவி” என்னும் சீவகசிந்தாமணிப் பாடல் பகுதியை நினை ஆட்டுகிறது. • . இங்கே கோவலன் நிலைமை சரியான எடுத்துக் காட்டாகும். அவன், தீயவரோடு சேர்ந்து பொழுது போக்கி, முன்னோர் தேடி வைத்த வானளாவ உயர்ந்த மலையனைய செல்வத்தை இழந்ததால் உண்டான இப் போதைய எனது ஏழ்மை நிலை மிகவும் நாணும் தருகிறது. என்று தன் குறையைத் தானே கூறுகிறான். சிலம்புப் பகுதி வருமாறு: