பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 195 "சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக் குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு காணுத் தரும்' (9:69-71) என்பது பாடல் பகுதி. இந்த நிலையே போல், கூதிர்ப் பருவம் முடிந்த போது மழை கிடைக்காத ஆறுகளின் நிலையும் இருந்ததாம். திங்களின் தோற்றம் நடன அரங்கில் முதலில் போட்டிருந்த திரைத்துணியை நீக்கியவுடன் நடன மங்கையின் முகம் தெரியத் தொடங் கியது போல், களிறு போன்ற கரு முகில் ஏகியதால் வானில் திங்கள் (சந்திரன்) தெளிவாகத் தெரியக் கண்டனராம். "கடம்திறந்து எழுகளிறு அனைய கார்முகில் இடம்திறந்து எகலின் பொலிந்தது இந்துவும் திறன் கவில்வுறு கங்கைமார் முகம் படம்திறந்து ஒருவலின் பொலியும் பான்மைபோல்"(109) கடம் ,மதம் (களிற்றின்மதம்) இந்து- திங்கள். படம்= துணி.. படம் என்னும் வட சொல்லுக்குத் துணி என்பது நேர்ப் பொருள். துணியில் (படத்தில்) எழுதப்பட்டதால், ஒவியம், வட்மொழியில் ஆகு பெயராய்ப் படம் எனப் பட்டது. தமிழில் கிழி என்றால் துணி. கிழியில் எழுதப் பட்டதால் ஒவியத்திற்குக் கிழி என்ற பெயரும் திவாகர நிகண்டில் தரப்பட்டுள்ளது. நடனம் பார்க்க வந்தவர்கள், எப்போது திரையை விலக்குவார்க்ள் என ஆவலுடன் எதிர் பார்த்திருப்பர் - திரை விலகியதும் நடன மாதைக் கண்டு களிப்புறுவர். திங்களின் தோற்றமும் அவ்வாறே களிப்பு நல்கக் கூடியது. . தெளிந்த நீர் வஞ்சனை யற்ற மாதவரின் உள்ளம் போல் நீர் நிலை களில் உள்ள நீர் தெளிந்திருந்ததாம். பஞ்சு என்று சொன்