பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஒலியின் பொருளைப் புரிந்து கொள்ள இயலும். பல இனப் பறவைகள் ஒரே நேரத்தில் ஒலி எழுப்புவதை எந்த இனமும் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பம் நிலவும். பம்பைப் பொய்கையிலும் பல இனப் பறவைகள், ஒன்றோடு ஒன்று ஒத்து இல்லாத புரிந்து கொள்ள முடியாத பலதரப்பட்ட ஒலிகளை ஒரே நேரத்தில் எழுப்பு கின்றனவாம். இதற்குக் கம்பர் கூறியுள்ள உவமை: ஆரியம் முதலிய பதினெண் நாட்டு மொழிகளையும் நன்கு புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒவ்வொருவரும் தத்தம் மொழிகளில் ஒரே நேரத்தில் பேசினால் ஏற்படும் குழப்ப நிலைமை உவமையாக்கப்பட்டுள்ளது. பாடல்: ‘ஆரியம் முதலிய பதினெண் பாடையில் பூரியர் ஒருவழிப் புகுந்த தாமென ஓர்வில கிளவிகள் ஒன்றொ டொப்பில சோர்வில விளம்புபுள் துவன்று கின்றது." (13) பூரியர் = அறியாதார். ஒர்வு இல - புரிந்து கொள்ள முடியாதவை. புள் = பறவை. துவன்றுகின்றது = (பல இனப் பறவைகள்) நிறைந்தது. கம்பர் இந்தப் பாடலில் மானிட இயலிலிருத்து பறவை யியலுக்குத் தாவியுள்ளார்; மொழியியலும் பேசியுள்ளார். பாடை = பாஷை = மொழி. கம்பர் தமது நூலில் வடவெழுத்துக் கலவாமல் பாடியிருக்கிற நுட்பமான மொழிப் பற்று இங்கே அறியத் தக்கது. அவர் தம் காலத்தில் அறியப்பட்ட பதினெட்டு மொழிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை; அங்கம், அருணம், கலிங்கம், கெளசிகம், காம்போசம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திரவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம், வங்கம் ஆகியவை.