பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு னாலே அஞ்சுகிற மடந்தையரின் மை பூசப் பெற்ற கண்கள் போல் நீரில் மீன்கள் துள்ளினவாம், 'வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர் நெஞ்செனத் தெளிந்தன நீரம், நீர்தொறும் பஞ்சுஎனச் சிவக்கும் மென்பாதப் பேதையர் அஞ்சனக் கண்ணெனப் பிறழ்ந்த ஆடல்மீன்' (113) மா தவசியர் தீவினையை மெய்யால் செய்யாதது மட்டுமன்று - வாக்கல் பேசாதது மட்டுமன்று - உள்ளத் தால் எண்ணுவதும் இல்லையாம். தீவினை பற்றி நினைப்பு இருந்தால் அல்லவா இவை செய்யத் தோன்றும். தீவினை என்பதை அறவே மறந்தே விட்டார்களாம். இது சுவையான கருத்து வெளிப்பாடாகும். உள்ளத்தில் தெளிவுண்டாயின் வாக்கினில் தெளிவுண்டாகும் என்று பாரதியார் கூறியுள்ள படி அவர்தம் உள்ளம் தெளிந்திருக்கும்; அதுபோல் நீரும் தெளிவுற்றிருந்ததாம். நீரம்=நீர் நீர் நிலைகள் பல இருந்த தால் நீரம் தெளிந்தன எனப் பன்மை முடிவு கொடுக்கப் பட்டது. நீரம்-பால் பகா அஃறிணைப் பெயர். நீர் என்ப தோடு 'அம் சாரியை சேர நீரம் என்றாயிற்று. இது ஒரு புதிய வழக்கே. பிங்கல நிகண்டில் நீருக்கு நீரம் என்னும் பெயர் தரப் பெற்றுள்ளது. ஆரணிய காண்டத்தில், சான்றோர் கவியும் தெளிந்தது. கோதாவரி ஆற்று நீரும் தெளிந்தது என்னும் கருத்தில் "சவிஉறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவி எனக் கிடந்த கோதா வரியினை வீரர்கண்டார்' (5:1) என்று கம்பர் கூறியுள்ளார். சான்றோர்க்கு உள்ளத்தில் தெளிவு இருந்தால் தானே கவியிலும் தெளிவிருக்கும். இது ஈண்டு எண்ணத் தக்கது.