பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 197 அடுத்து, - பெண்களின் கால்களின் அடியில் பஞ்சால் செங்குழம்பு ஊட்டுவதுண்டு. இதற்குச் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டுதல் என்பது பெயர். பஞ்சு என்று சொன்ன துமே - ஐயோ அது உறுத்துமே என அஞ்சுகின்றார்களாம். எனவே, செம்பஞ்சு ஊட்டாமலேயே சிவந்து விடுகின்றன வாம். அவ்வளவு மென்மையான கால் அடி உடையவர் களாம் பெண்கள். இங்கே நாலடியாரில் உள்ள - "அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங் கிற்கன்னோ பரற்கானம் ஆற்றின கொல்லோ - அரக்கார்ந்த பஞ்சுகொண் டுட்டினும் பையெனப் பையெனஎன்று அஞ்சிப் பின்வாங்கும் அடி (396) என்னும் பாடல் ஒப்பு நோக்கற் பாற்று, பஞ்சு கொண்டு ஊட்டினாலும் மெதுவாக - மெதுவாக, (பையென) என்று கூறிக்கொண்டே காலைப் பின்னால் இழுத்துக் கொள்வா ளாம். இது மேட்டுக்குடி மங்கையர்க்கே பொருந்தும். கால் கடுக்க வேலை செய்யும் பெண்கட்குப் பொருந்தாது. இது கம்பருக்குத் தெரியாதா என்ன! இவ்வாறு கற்பனை செய்வது, பெண்கள் ஆண்களினும் உடலால் மென்மையான வர்கள் என்பதை அறிவிப்பதற்கேயாம். மெல்லியல்’ என்பது பெண்ணைக் குறிப்பதன்றோ? சிறார் ஊசி மருந்து என்று சொன்னாலேயே அச்சம் வர அழுவர். சிலர் சிங்கம், புலி, பாம்பு என்று சொன்னாலே அஞ்சுவர். புலி அடியைக் கண்டு பயந்தவனைக் கண்டு பயந்தவனைக் கண்டு பயந்தவனின் கதைதான் தெரியுமே. இவ்வாறு, பஞ்சு என்றதுமே நெஞ்சு பதைப்பராம். இதுவும் ஒரு சுவையான கருத்து வெளிப்பாடாகும். அஞ்சனம் - மை. ஆடல் மீன் = நீரில் துள்ளி ஆடும் மீன், பெண்களின் கண்போல் மீன்கள் துள்ளுவதாகக்