பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கூறுவது பழைய செய்தி; ஆயினும் மழை பெய்தபோது உள்ளடங்கிக் கிடந்த மீன்கள் இப்போது வெளிப்போந்து துள்ள ஆரம்பித்தன என்று கூறுகிறார். தவளைகளின் அடக்கம் ஆசிரியர்பால் கல்வி கற்கும் பல்வகைச் சிறுவர்களின் ஆரவாரக் கூச்சல் ஒலியே போல, மழைக்காலத்தில் பேர் ஒலி எழுப்பிய தவளைகளின் நாக்குகள், செல்லக்கூடிய இடத்தில் தவிர மற்ற இடங்களில் ஒன்றும் உரைக்காத அறிஞர்களைப் போல் ஒலி எழுப்பாது அடங்கி விட்டன: "கல்வியில் திகழ் கணக்காயர் கம்பலைப் பல்விதச் சிறாரெனப் பகர்வ பல்அரி செல்லிடத் தல்லதுஒன்று உரைத்தல் செய்கலா நல்லறி வாளரின் அவிந்தகா எலாம்” (1.15) கணக்காயர் = ஆசிரியர். கம்பலை = ஆரவாரக் கூச்சல். அரி = தவளை. நா = நாக்கு. ஆசிரியர்க்குக் கணக்காயர் என்ற பெயர் வந்த வரலாறாவது: பண்டைக் காலத்தில் எழுதிவைத்துப் படிக்கவில்லை. பொருள் கொடுத்து வாங்குவதைக் கணக்கிடச் சுவரிலோ வேறு எதிலோ கோடுகள் போட்டனர். பின்னர் ஒலையில் போட்டனர். ஒலையில் இட்ட கணக்குக் குறியைப் பார்வையிடுவதற்கு அந்த ஒலையை எடுத்துவா என்று சொல்லாமல், அந்தக் கணக்கை எடுத்துவா என்றனர். பின்னர் எழுதி வைக்கப்பட்டவற்றிற் கெல்லாம் கணக்கு என்னும் பெயர் தரப்பட்டது. நாளடைவில் கணக்கு என்பது நூல் (புத்தகம்) என்பதைக் குறிக்கலாயிற்று. எனவே, கணக்கைக் (நூலைக்) கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கணக்காயர் எனப்பட்டார். எண்ணே (கணக்கே) முற்பட்டது; எழுத்து பிற்பட்டது. எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும் என்னும் ஒளவை ம்ொழியிலும், எண்