பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 199 என்ப ஏனை எழுத்து என்ப' என்னும் குறட்பாவிலும் எண் முதலிடம் பெற்றிருப்பது காண்க. சிறுவர் பள்ளிகளில் எப்போதும் இரைச்சல் இருக்கும். படிப்பு இரைச்சல் ஒரு புறம் இருக்க அவர்களின் பேச்சொலியும் அதனோடு சேர்ந்து கொள்ளும். அந்தக் காலத்தில் முறைபோட்டுச் சொல்லிக் கொடுப்பது உண்டு. அதாவது, ஆசிரியர் ஒரு பாடலைச் சொல்லச் சொல்ல, மாணாக்கர்களும் திரும்பத் திரும்பச் சொல்வர். பின் ஒரு மாணவன் சொல்ல, அதை மற்ற மாணவர்கள் சொல்வர். இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்வதால் மனப்பாடம் வந்து விடும். இதற்கு Drill - Practice என ஆங்கிலத்தில் பெயர் சொல்வதுண்டு. மற்றும், பல்கால் பயிறல் - பயிற்றல் படிப்புக்குத் தாய் என்னும் கருத்துடைய Repetition is mother of Learning’ orgârgoth LL1-p}jg, oft@6) முது மொழியும் உண்டு. எனவே சிறார்பள்ளி ஒரே கூச்சல் உள்ளதாகத் தோன்றும். (இப்போது கல்லூரி வகுப்புகளிலும் பல்கலைக் கழக வகுப்புகளிலும் அரட்டைக் கச்சேரி நடப்பதை விட்டு விடுவோம்.) இந்தக் கூச்சல்தான் தவளைகளின் கத்தலுக்கு உவமை யாக்கப்பட்டுள்ளது. ஏன் மழைக் காலத்துத் தவளைகள் போல் கத்துகிறீர்கள்’ என்றும் கூறுவதைக் கேட்டிருக்கலாம். மற்றும் இப்பாடலில் உள்ள பல் விதச் சிறார்’ என்பதும் எண்ணத்தக்கது. எல்லா மாணாக்கர்களும், வயதாலும், உடல் நலத்தாலும், செல்வத்தாலும், மற்ற சூழ்நிலை களாலும் அக்காலத்தில் ஒரே விதமாய் இருக்கமுடியாது. இக்காலத்திலேயே இல்லையெனில், அக்காலத்தில் எவ்வாறு இருக்க முடியும்? பல்விதச் சிறார் என்றது போலவே, பல் அரி (பல வகையான தவளைகள்) என்று கூறியுள்ளமையும் எண்ணத்தக்கது.