பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 201 அவளது மேனி ஒருவிதமான பசலை நிறம் (பொன்னிறம்) பெற்றிருப்பதைப் போல, மழைக் காலத்தில் பசுமை நிறமுற்றிருந்த கமுக (பாக்கு) மரக்குலைகள், இப்போது பசுமை நீங்கிப் பொன்னிறமாய்த் தோன்றுகின்றனவாம்: "சொன்னிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின் இன்னிறம் பசலையுற்று இருந்த மாதரின் தன்னிறம் பயப்பய நீங்கித் தள்ளரும் பொன்னிறம் பொருந்தின பூகத் தாறெலாம்’ (117) சொன்னிறை = சொல் நிறை. படிப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதால், கல்வியைச் சொல் நிறை கேள்வி என்றார். கேள்வியும் கல்வியாகும் என்பது திவாகரம். 'ஓதல் பிரிவு ஒரு மூன்று யாண்டே என்பது நம்பி அகப் பொருள். இந்தக் காலம்போல் அந்தக் காலத்திலும் அதிலும் திருமணம் ஆனவர்களும் வெளிநாடுகட்குச் சென்று கல்வி கற்றுள்ளமை தெரிய வருகிறது. அந்தக் காலத்தில், 'யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாம்துணையும் கல்லாத வாறு' (397) என வள்ளுவர் சொல்லிவிட்டுப் போனதற்கு இணங்க, இந்தக் காலத்தில் சாகும்வரை படிக்கவேண்டியதாயுள்ளது. மாணிக்க வாசகர் சொல்லியுள்ளபடி, கல்வி என்னும் பல்கடல் பிழைப்பது என்றோ? - எவ்வாறோ? மாந்தர் = படிக்கச் சென்ற மக்கள். இன்னிறம் = இல்நிலும், இல் = வீடு. பூகத்தாறு = பூகம் தாறு. பூகம் = கமுகு, தாறு - குலை. பச்சைநிறக் குலை பொன்னிறமானது என்றால் முற்றி முதிர்ந்துவிட்டது என்பது பொருள். கம்பர் வாய்ப்பு நேரும் போதெல்லாம், உவமைகளின் வாயிலாக உயர்ந்த படிப்பினைகளையும் செய்திகளையும் மக்கட்கு அறிவுறுத்தியுள்ளார் என்பதற்குச் சான்றாக இந்த ஒரு பாடல் போதுமே!