பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கிட்கிங்தைப் படலம் கிட்கிந்தை என்னும் நகரில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறும் படலம் ஆதலின் இப்பெயர்த் தாயிற்று இது. இராமனது சினம் நான்கு திங்கள் கடந்ததும் படையுடன் வருக என்று இராமன் சொல்லியனுப்பியபடிச் சுக்கிரீவன் வரவில்லை. அதனால் சினங் கொண்ட இராமன் இலக்குவனை நோக்கி, குறித்த காலம் ஆகியும் இன்னும் வராத சுக்கிரீவன் நன்றியை மறந்து விட்டான் - நம்மேல் அன்பு இல்லா விடினும் அறத்தை மறக்கலாமா? - நம் வலிமையையும் மறந்து விட்டான் போலும் அவனைக் கொன்றாலும் அது குற்றம் ஆகாது - நீ போய் அவனது உள்ளத்தின் போக்கை அறிந்து வர வேண்டும். 'நன்றி கொன்று அருநட்பொடு கார் அறுத்து. ஒன்றும் மெய்ம்மை சிதைத்துஉரை பொய்த்துளான் கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால் சென்று மற்றவன் சிங்தையைத் தேர்குவாய்' (3) நன்றி, அறம், மெய்ம்மை, நட்பு, அன்பு எல்லா வற்றையும் மறந்தவனைக் கொன்றாலும் குற்றம் இல்லை என்று இராமன் கூறியிருப்பது மிகவும் கடுமையான தாகும். இதற்காக ஆளையே கொன்று விடுதல் பொருந்தாது. ஆனால், கொன்றாலும் குற்றமில்லை என்றுதான் இராமன் சொன்னானே. தவிர, கொல்லவில்லை. இராமன் தெய்வப் பிறவியாயினும், இங்கே மக்களாகவே நடந்து கொண்டுள்ளான். மனைவியை இழந்தவன்; மனைவியை