பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 203 மீட்கச் சுக்கிரீவன் வரவில்லையே என்ற காழ்ப்பில் இவ்வாறு கூறுவது இயற்கையே. உண்டு - உண்டு இலக்குவனே! நீ சுக்கிரீவனிடம் சென்று, அரக்கர் களைக் கொன்று அவ்வுலகத்திற்கு அனுப்பிய வில்லும் உண்டு - அம்பும் உண்டு - எமனும் உண்டு - என்று அவனுக்குச் சொல்லி நினைவு படுத்துக: "வெம்பு கண்டகர் விண்புக வேரறுத்து இம்பர் கல்லறம் செய்ய எடுத்தவில் கொம்பும் உண்டு.அருங் கூற்றமும்உண்டு உங்கள் அம்பும் உண்டென்று சொல்லுகம் ஆணையே' (4) வெம்பு கண்டகர்=கொடிய அரக்கர். வில் கொம்பு= வில் தண்டு. உங்கள் அம்பு என்றது; உங்களுக்காக வாலியைக் கொன்ற அம்பு - இன்னும் நீங்கள் ஒழுங்காய் நடந்து கொள்ளாவிடின் உங்கள் மேல் எய்தற்கு உரிய அம்பு - மொத்தத்தில் உங்கள் தொடர்பாகவே வைத்துக் கொண்டிருக்கும் அம்பு என்பதை அறிவிப்பதற்காம். கூற்றமும் உண்டு என்றது, அரக்கர் சிலரின் உயிரையும் வாலியின் உயிரையும் எங்களால் பெற்று உண்டு மேலும் காத்துக்கொண்டிருக்கிறான் எமன் என்று கேலிக் கிண்டல் செய்வதாகும். ஐந்தும் ஐம்பதும் நஞ்சு போன்ற கொடியவரை ஒறுத்தல் வஞ்சகச் செயல் ஆகாது - அது அறநெறியே. சுக்கிரீவன் ஐந்து வயதிலும் அறியாதவனே - அது சரி - ஐம்பதிலும் வளையாதவனா யுள்ளானே அவன் நெஞ்சில் நின்று தைக்கும்படி எல்லாம் எடுத்துச் சொல்லுக: