பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 'நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது வஞ்சம் அன்று மனுவழக்கு ஆதலால் அஞ்சில் ஐம்பதில் ஒன்றறி யாதவன் நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாம்' (5) தீயவரை ஒறுத்தல் முறையே என்கிறான் இங்கே, "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண்' (20:54, 65) என்னும் சிலம்புப்பகுதி மீண்டும் நினைவு கூரத் தக்கது. 'அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாமறியார்” என்பது பெரியோர் கூற்று. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதி லும் லளையாது” என்பது மக்கள் பழமொழி. "ஆற்றும் இளமையில் கல்லாதான் மூப்பின்கண் போற்றும் எனவும் புகலுமோ” என்பது பழமொழி நானூறு என்னும் நூல் பாடல். இங்கே, அரசியல் நெறி - கூட்டு நட்பு நெறி முதலியவற்றைப் பெரியவனாகியும் அறியாத சுக்கிரீவன் ஐந்து அகவை (வயது) உடைய சிறுவனுக்கு ஒப்பாவான் - என்பது கருத்து. ஐந்து என்பது அஞ்சு என்றாயது போலி - இதனை மரூஉ என்பாரும் உளர். பேரும் மாளும் நீங்கள் சுற்றத்துடன் ஆண்டு இன்புற வேண்டுமெனில் குறித்த நாளில் வந்துவிட வேண்டும்; இல்லையேல், உங்கள் பேரே உலகத்திலிருந்து மறைந்து விடும்: “ஊரும் ஆளும் அரசும் நூம்சுற்றமும் நீரும் ஆளுதிரே எனின், நேர்ந்தநாள் வாரும், வாரலிராம் எனின், வானரப் பேரும் மாளும் எனும்பொருள் பேசுவாய்' (6)