பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - - - - 205 வாக்குக் கொடுத்தபடிப் படையுடன் வராவிடின், சுக்கிரீவன் முதலிய - இப்போதுள்ள வானரர்கள் அழிந்து போவது மட்டுமல்லாமல், வானரக் குலம் முற்றுமே பூண்டோடு-வேரோடு அழிந்துவிடும் என்று சொல்ல வேண்டுமாம். அதாவது அகரவரிசையில் (டிக்ஷனரியில்) வானரம் என்ற சொல்லே இராது என்பது கருத்து. செத்த காலேஜ்' என்று சொல்லப்படும் பொருட் காட்சி நிலையத்தில் வானரம்போல் உருவம் செய்தோ-அல்லது இறந்து போன ஒரு வானரத்தின் உடலைப் பதப்படுத்தி வைத்தோ பார்க்கவேண்டும் என்ற அளவுக்கு நிலைமை ஆகி விடும் என்பதைத்தான் பேரும் மாளும் என்னும் தொடர் அறிவிக்கிறது. பிறர் இன்மை ஒருவேளை, இந்த இராம இலக்குவர்கள் கிடக்கட்டும்இவர்களினும் வலியவராயுள்ள வேறு பிறரின் துணை கொண்டு தம்மைக் காத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் புறக்கணிப்புப் (அலட்சியப்) போக்குடன் இருப்பதாகத் தெரிந்தால், இலக்குவனாகிய உன்னை வெல்ல இம்மூவுலகினும் ஒருவரும் இல்லை என்பதையும் அறிவிப்பாயாக: . "இன்னம் நாடுதும் இங்கு இவர்க்கும்வலி துன்னினாரை எனத் துணிந் தார்எனின் உன்னை வெல்ல உலகொரு மூன்றினும் கின்அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய்' (7) ஒருவரிடம் தக்க உதவி பெற்ற பின்பு, அவரை மறந்து, இன்னும் எத்தனையோ பேர் உதவ இருக்கிறார்கள்-இவர் கிடக்கட்டும் என்று புறக்கணிப்பவர்கள் உலகில் உண்டு. இதைத்தான் இராமன் குறிப்பிட்டுள்ளான். கறிவேப்பிலைக் கொத்தை நறுமண-நறுஞ்சுவைக்காகப் பயன்படுத்திக்