பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 17 இறப்பொடு பிறப்பு நீர்க் காக்கைகள் பொய்கையில் முழுகி மீன்களைக் கவ்விக்கொண்டு மேல் எழுவதும் மீண்டும் முழுகுவதுமா யிருந்தன. இக்காட்சியைக் கம்பரது உள்ளம் இறப்பும் பிறப்புமாக எண்ணியது. மீன்கள் முழுகுவது இறப்பு. மீண்டும் எழுவது பிறப்பு. பெரிய செய்தியைச் சிறிய செய்தியின் வாயிலாகக் கம்பர் நினைவு கூர்ந்துள்ளார். “எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பிவை என்னக் கவ்வு மீனொடு முழுகின எழுவன கரண்டம்’ (16) என்பது பாடல் பகுதி. கரண்டம் = நீர்க் காக்கை, கவ்வும் மீனொடு எழுவன முழுகின' என்றிருப்பின் பொருத்தமா யிருக்கும். ஆனால், முழுகுவது இறப்பு எழுவது பிறப்பு ஆதலின், முழுகுவதை முதலில் கூறிவிட்டார் கம்பர். ஆவது செய்தும் பெண்டிரின் நடைக்கு அன்னத்தையும், கண்ணுக்குக் குவளையையும், இதழுக்குக் (உதட்டுக்குக்) குமுத மலரையும் உவமையாகக் கூறுவது இலக்கிய மரபு. இந்த உவமையை ஒரு கற்பனைக்குப் பயன்படுத்திக் கொண்டார் கம்பர். சீதையைக் காணாது வருந்துகிற இராமனுக்கு நம்மால் ஆவது செய்தும் (இயன்றது செய்வோம்) என அன்னம் தன் நடையின் வாயிலாகச் சீதையின் நடையையும், குவளை தன் தோற்றத்தின் வாயிலாகச் சீதையின் கண்களையும், குமுதம் தன் அமைப்பின் வாயிலாகச் சீதையின் இதழையும் இராமனுக்குக் காட்டினவாம். பாடல்: "கவள யானை யன்னாற்கு அந்தக் கடிநறுங் கமலத் தவளை ஈகிலம் ஆவது செய்தும்என் றருளித் திவள அன்னங்கள் திருநடை காட்டுவ, செங்கண் குவளை காட்டுவ, துவர் இதழ் காட்டுவ குமுதம்’ (17)