பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு கொண்டு பின்னர் தூக்கி எறிந்து விடுபவரைப்போன்ற நிலையில் வானரர் உள்ளனரா என இராமன் ஐயுறுவதில் உண்மைப் பொருத்தம் உள்ளது. இராமனது தெளிவு சுக்கிரிவனைக் கொன்றாலும் குற்றமில்லை என்று கூறிய இராமன் பிறகு தெளிவுடன் (நிதானத்துடன்) சொல்லுகின்றான்: தம்பி! நீ நீதியை எடுத்துச் சொல்; அவர்கள் ஒத்து வரவில்லை எனில், நீ வல்லே சினந்து அவர்களைக் கொல்லுதல் போன்ற செயலில் இறங்கிவிடாதே. அவர்கள் சொல்வதைத் தெரிந்து கொண்டுவா எனக் கூறி அனுப்பினான் இராமன்; திே யாதி நிகழ்த்தினை கின்றது வேதியாத பொழுது வெகுண்டு அவண் சாதியாது அவர்சொல் த்ரத் தக்கனை போதியாதி என்றான் புகழ்ப்பூணினான்" (8) அவண் = அவ்விடத்தே. சாதியாது = ஒறுக்காமல், கொல்லாமல். சொல்தரத்தக்கனை=அவர்களின் சொல்லை என்னிடம் தரத் (சொல்லத்) தகுதியுடையவனாய் வா. கம்பர் இங்கே நம்மை ஏமாற்றிவிட்டார். சுக்கிரீவனைக் கொன்றாலும் குற்றம் இல்லை என்று முதலில் கூறியதன் வாயிலாக முதலில் இராமனை வெகுளி உடையவனாகக் காட்டிவிட்டு, இறுதியில் அவர்களை ஒன்றும் செய்யாதே என்று கூறியதன் வாயிலாக இராமனது தெளிந்த (நிதானமான) நிலையை நமக்குக் காட்டியுள்ளார். முதலில் இராமனது பண்பில் ஐயுற்றவர்கள் பிறகு தெளிவடையச் செய்து விட்டார் கம்பர். -