பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - - - - - - ----- " - 20? சிங்தையுள் நீங்காமை இலக்குவன் தமையனின் ஆணையை ஏற்றுச் சிறிதும் காலம் தாழ்த்தாமல் வில்-அம்புடன் தொலைவில் உள்ள கிட்கிந்தை நகரை நோக்கிச் சென்றானாம். அவனது செலவைப்பற்றிக் கம்பர் பின்வருமாறு கூறுகிறார்: "சேனின் நீங்கினன் சிங்தையுள் நீங்கலான்’ (9) சேண் = தொலைவு. இராமனைவிட்டுப் பிரிந்தறியாத இலக்குவன் இப்போது அவனைத் தனியாக விட்டுத் தொலைவில் பிரிந்து சென்றானாம்; ஆனால் தன் உள்ளத்தி லிருந்து இராமனைப் பிரியவில்லையாம். இராமனது சிந்தையினின்றுங்கூடப் பிரிந்திருக்க மாட்டான். இருவரும் ஒருவர்க்கு ஒருவர் தம் நெஞ்சில் நினைத்துக்கொண்டேயிருந் திருப்பர்போலும். இது சுவையான கருத்து வெளிப்பாடு. வானரர்கள் பட்ட பாடு இலக்குவன் மிடுக்கோடு விரைந்து வருதலைக்கண்ட வானரர்கள் அஞ்சி ஒடி அங்கதனிடம் இதைக் கூறினர். அவன் சுக்கிரீவனிடம் ஓடினான். சுக்கிரீவன் மதுவுண்ட மயக்கத்தோடு, பணிப்பெண்கள் கைகால்களைப் பிடித்து விட உறங்கிக்கொண்டிருந்தான். • 'இள முலைச்சியர் ஏந்துஅடி தைவர விலை துயிற்கு விருந்து விரும்புவான்’ (18) என்பது பாடல் பகுதி. கை கால்களைப் பிடித்துவிட்டால் தூக்கம் வரும் என்பது ஒரு கருத்து. செல்வர்கட்குப் பணியாளர்களும், முதியோர்க்கு இளைஞரும் கால்பிடித்து விடுவர். கணவனுக்கு மனைவி கால் பிடித்து விடுவதும் உண்டு. ஆனால் மனைவிக்குக் கணவன் கால் பிடிப்பது நம் நாட்டில் இல்லை.