பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு மக்களினம் மட்டுந்தானா கால் பிடிக்க உறங்கும்? கரும்புகூடக் கால் வருட உறங்குமாம். வயலில் உள்ள கரும்பின் காலைத் தென்றல் காற்று வருடக் கரும்பு உறங்குமாம். இது நடந்தது திருவையாற்றில். ஞானசம்பந்தரின் திருவையாற்றுத் தேவாரப் பதிகத்தில் இது கூறப்பட்டுள்ளது. மலர்மணத்தை ஏந்திவரும் தென்றல் காற்று அடிவருடும் போது, குயில் உறங்கச் செய்யும் தாலாட்டுப் பாடியதாம். - குன்றெலாம் குயில் கூவக் கொழும்பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கும் தென்றலார் வருடச் செழுங் கரும்பு கண் வளரும் திருவை யாறே” (3:7) என்பது பாடல் பகுதி. கம்பர் இப்பகுதியில் நயமான கருத்து ஒன்று நல்கியுள்ளார். சிலர் தூங்குவதில் பெரு விருப்பங்கொண்டு பேரின்பம் கொள்வர். தூக்கம் அவர்கட்கு ஒரு விருந்தாக இருக்கும். அதற்கு மாறாக, தூக்கத்திற்குச் சுக்கிரீவன் விருந்தாக இருந்தானாம். அங்ஙனம் என்றால், அந்த அளவுக்குப் பேருறக்கம் கொண்டிருந்தான் என்பது கருத்தாகும். இது கருத்து வெளியீட்டில் ஒரு புதுமை யாகும். இந்தப் புதுமைப் புகழுக்கு உரியவர் கம்பர் பெருமான். - செல்வர்கள் இராமன் உதவிய அரசச் செல்வமாகிய கள்ளினால் சுக்கிரீவன் மிகவும் மதிமயங்கிக் களிப்படைந்து விட்டானாம். மது அருந்தினால் மயக்க நோய்வரக் கேட்கவா வேண்டும்? 'தெள்ளியோர் உதவப் பெருஞ் செல்வமாம் கள்ளினால் அதிகம் களித்தான்" (19) பெருஞ்செல்வத்தை, மயக்கம்தரும் கள் என்றார் கம்பர். ஒரு புலவர் பெருத்த செல்வத்தைப் பிணி என்றார்.