பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 209 அந்தப் பிணி, எதிரே வரும் நண்பர்களையும் உறவினர் களையுங் கூட ஏறெடுத்துப் பார்க்க முடியாதபடிக் கண்களை மறைத்துவிடுமாம். இதற்கு மருந்து வாகடத்தில் (மருத்துவ நூலில்) இல்லையாம். இதற்கு மருந்து தரித்திரம் தானாம். அவருக்குத் தரித்திரம் (வறுமை)வரின் மீண்டும் கண்தெரியத் தொடங்கிவிடுமாம். 'பெருத்திடு செல்வமாம் பிணிவந்து உற்றிடின் உருத் தெரியாமலே ஒளி மழுங்கிடும் மருத்து உளவோ எனில் வாகடத்துஇலை தரித்திரம் என்னும்ஒர் மருந்தின் தீருமே” என்பது ஒரு தனிப்பாடல். சுக்கிர்வா! உன் அரசு நிலைக்க வேண்டுமானால் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்று மிரட்டத் தொடங்கியது இது பற்றியே. தவறினால் அரசு நீங்க, பெருஞ்செல்வமாம் மதுமயக்கப் பிணி அகன்று வடும். செல்வம் என்னும் அல்லல்’ எனச் செல் ཏྣ་ཚ அல்லல் என்றுள்ளார் மணிவாசகர். அங்கதன் எவ்வளவு எழுப்பியும் சுக்கிரீவன் எழாததால், அங்கதன் அனுமனிடம் சென்று நிலைமையைக் கூறினான். அனுமன் வானரர் சிலருடன் சென்று தாரையிடம் கூறி ஆவணபுரிதற்கு வழி தேடினான். தாரையோ சுக்கிரீவன் கடமை தவறியதைச் சுட்டிக்காட்டிக் கண்டித்தாள் இது இவ்வாறிருக்க, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றபடி, இலக்குவன் மிகுந்த சீற்றத்துடன் வருகிறான் என்பதை அவனது முகத்தைக் கொண்டு தெரிந்து கொண்ட வானரர்கள், கோட்டை வாயிலுக்குள் இலக்குவன் புகாதபடி பெரிய பெரிய மலைக் கற்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டுவந்து வாயிலை அடைத்து விட்டனர். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்னும் கதையில், திறந்திடு சீசெம்' என்று சொன்னதும் கதவு