பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 - - - - - - - - - -- ...r-- - . . . . . . . கிட்கிந்தா காண்டத் திறனாய்வு திறந்து கொண்டதுபோல், இலக்குவன் காலால் உதைத்ததும் கதவு திறந்து கொண்டது. உடனே வானரர்கள் பலர் அஞ்சி நடுங்கிக் காட்டிற்குள் ஒடி மறைந்து கொண்டார்களாம். இதனால், விண்மீன்கள் இல்லாத வானம்போல் கிட்கிந்தை நகரம் பொலி வற்றுக் காணப்பட்டதாம். "வானரங்கள் வெருவி மலை ஒரீஇக் கான் ஒருங்கு படரஅக் கார்வரை மீன் நெருங்கிய வானகம் மீனெலாம் போன பின் பொலிவற்றது போன்றதே (40) மீன் - விண்மீன்கள் - நட்சத்திரங்கள். வெண்ணிலா இல்லாத விண் பொலிவற்றிருக்கும் என்பார்கள். ஆனால், வெண்ணிலா இல்லாத காலத்தும் விண்ணிலே விண்மீன்கள் இருக்கும். அவையும் இல்லாத விண் மிகவும் பொலிவற்றுக் காணப்படும். அல்லவா? அந்த நிலையைத்தான் . கம்பர் இங்கே உவமையாகத் தந்துள்ளார். மீன் நெருங்கிய வானகம் என்றார் - அதாவது அளவற்ற விண்மீன்கள் அகன்ற வானத்தில் நெருங்கி அமைந்துள்ளவையாம். இதைத்தான், . "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன" (1,2) என மாணிக்கவாசகர் திருவாசகம் - திருவண்டப் பகுதியில் கூறியுள்ளார். அண்ட்ப்பகுதி = பெருவிண்வெளி. உண்டை = உருண்டை வடிவமாய் உள்ள கோளங்கள். பிறக்கம் = நெருக்கம் - மிகுதி. இந்தக் கோளங்கள் நூற்றெரு கோடிக்கு மேலே உள்ளனவாம். ஒவ்வொரு விண்மீனும் ஒரு கோளமாகும். வெகு தொலைவில் இருப்பதால் ஒவ்வொன்றும் சிறியதாய்த் தெரிகிறது.