பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - 211 கம்பரின் மீன் நெருங்கிய வானகம் என்பதனோடு இந்தத் திருவாசகப் பகுதி ஒப்பு நோக்கற் பாற்று. வினையம் ஈது அனுமன் தாரையிடம், நீங்கள் பல மாதர்களை அழைத்துக்கொண்டு போய் வாயிலில் நின்றால், இலக்குவன் பெண்களைப் பார்க்கக் கூச்சமுற்று அப்பால் போய் விடுவான். இப்போது நாம் செய்யவேண்டிய சூழ்ச்சி இதுதான் என்று கூறினான். "அனைஎதிர்ந்து இவண் ஆய்வளை யாரொடு மனையின் வாயில் வழியினை மாற்றினால் கினையும் வீரன் அங்கீள்நெறி நோக்கலான் வினையம் ஈதுஎன்று அனுமன் விளம்பினான்” (42) அனை = அன்னை - தாய் என்று அனுமன் குறிப் பிடுகிறான். ஆய்வளையார் = பெண்கள். இந்தப் பாடலின் மூன்றாம். அடியில் உள்ள வீரன், நோக்கலான் என்னும் சொற்கள், பிறன் மனை நோக்காத பேராண்மை' (148) என்னும் திருக்குறள் பகுதியை நினைவூட்டுகிறது. பிற பெண்களை நோக்காதிருப்பது பெரிய ஆண்மையாம். அதைச் செய்யாத-அதாவது - பிறபெண்களை நோக்காத இலக்குவன் வீரன்’ எனப்பட்டான். இலக்குவன் தன் அண்ணியாகிய சீதையின் காலணியை மட்டுமே அறிந்திருந் தான் - அவளது காலைத் தவிர மேலுள்ள அவளது உருவத்தை நோக்கிய தில்லை என்னும், கருத்தும் ஈண்டு இணைத்து. எண்ணத்திக்கது. எல்லாரும் இப்படி இருப் பார்களா? இரண்டு கண்களும் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும். ஒரு கண்ணால் ஒரு பொருளையும் மற்றொரு கண்ணால் மற்றொரு பொருளையும் பார்க்கமுடியாது.