பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு ஆனால் சில ஆண்பிள்ளைச் சிங்கங்கள் மட்டும், கோயிலில் ஒரு கண்ணால் கடவுள் திருமேனியையும் மற்றொரு கண்ணால் வேறு திருமேனிகளையும் பார்க்கும் வல்லமை உடையவர்கள்போல் தோற்றம் அளிக்கின்றனர். உபாயம், தந்திரம் என்னும் வட சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொல்லாகச் சூழ்ச்சி என்பதனைக் கூறலாம். கம்பரோ வினையம் என்னும் மற்றொரு சொல்லையும் நமக்கு நினைவூட்டிச் சென்றுள்ளார். இது அரிய இலக்கியச் சொல்போல நமக்குத் தோன்றினும், இது எளிய மக்களும் பயன்படுத்தும் எளிய சொல்லாகும். "ஐயோ! அவளா - அவள் பெரிய வினையாயிற்றே" - அவன் வினையே அவனை அழித்துவிட்டது’ - 'விளையாட்டு வினை யாயிற்று” என்னும் தொடர்கள் மக்கள் வாயிலே விளை யாடுபவையாகும். "தன்வினை தன்னைச் சுடும் வீட்டப்பம் ஒட்டைச் சுடும்' எனப் பட்டினத்தார் சொன்னதாகக் கூறப்படும் தொடரும் இங்கே எண்ணத்தக்கது. மாமியர் குழு. தார்ை மகளிர் கூட்டத்துடன் வந்ததைப் பார்த்ததும், தாமரை போன்ற தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, வில்லைத் தரையில் ஊன்றி, மாமியார் கூட்டத்திடையே அகப்பட்ட மருமகன்போல் கூச்சத்துடன் காணப்பட்டானாம் இலக்குவன். - -- - “தாமரைவதனம் சாய்த்துத் தனுநெடுந் தரையில்ஊன்றி. மாமியார் குழுவின் வந்தானாமென மைந்தன்கிற்ப' (48) மாமியார் முன்னே மருமகன் கூச்சப்படுவதும், மருமகன் முன்னே மாமியார் கூச்சப்படுவதும் உண்டு. இது உலக நடைமுறை எனினும், இலக்குவனுக்கு உவமையாகக் காட்டியிருப்பது ஒரு புதுமையாகும்.