பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 213 தாரையின் திறமை தாரை இலக்குவனை நோக்கி, இந்திரன் முதலியோர் பல காலம் நோற்றாலும் நினது வருகையைப் பெறல் அரிது - ஆனால், நாங்கள் நினது வருகையைப் பெரும் பேறாகக் கருதுகிறோம் - இதனை எளிதில் பெற்றுப் பிழைத்தோம் - எங்கள் தீவினையும் தீர்ந்தது - இதனினும் வேறு நன்மை உண்டோ - என்றாள். 'அந்தமில் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி இந்திரன் முதலி னோர்க்கும் எய்தலாம் இயல்பிற் றாமே மைந்தகின் பாதங் கொண்டுளம் மனைவரப் பெற்று வாழ்ந்தேம் உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதிவேறு இதனின் உண்டோ!” (49) தேவர்க்கும் கிடைக்காத பெரும்பேறு எங்களுக்குக் கிடைத்தது எனத் தாரை கூறியது மிக்க திறமையுடைய பேச்சல்லவா? இங்கே, நாநலம் என்னும் நலனுடைமை' என்னும் குறள் எண்ணத்தக்கது. மிக்க திறமுடன் பேசிய தாரை, ஐயா, நீங்கள் வந்த காரணம் என்னவோ என வினவினாள். இலக்குவன் நிலை இதுவரை பெண்களை ஏறெடுத்துப் பார்க்காத இலக்குவன் இப்போது தாரையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்ததும் தன் தாய்மார்களின் நினைவு வந்துவிட்டது. தாலி முதற்கொண்டு எந்த அணியும் இன்றி - பூ இன்றிப் பொட்டு இன்றிக் கழுத்து வரையும் போர்த்திக் கொண்டுள்ள தாரையைக் கண்டதும் கண்களினின்றும் நீர் துளிக்க நின்றான்;