பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 'ஏர்குலாம் முகத்தினாளை இறைமுகம் எடுத்துநோக்கி தார்குலாம் அலங்கல்மார்பன் தாயரை கினைந்து நைந்தான்” (51) "மங்கல அணியை நீக்கி மணியணி துறந்து வாசக் கொங்கலர் கோதைமாற்றிக் குங்குமம் சாந்தம்கொட்டாப் பொங்குவெம் முலைகள்பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த கங்கையைக் கண்டவள்ளல் நயனங்கள் பனிப்பகின்றான்” (52) தாலி பிற அணிகலன்கள், பூ, பொட்டு எதுவும் இல்லாத அவளது கைம்மைத் தோற்றத்தைக் கண்டதும், அவ்வாறே கைம்மைக் கோலத்துடன் உள்ள தன் தாய்மார் களின் நினைவு வரவே, கண்களிலிருந்து நீர் உகுத்தான் இலக்குவன். மனத்தின் பொதுப் போக்காக (General Tendency) 52,351sorsfal (Sympathy) gray, org) 047660L படும். அதாவது, மகிழ்ச்சியான சூழ்நிலையில் மகிழ்ச்சி அடைவது போல், துயரமான சூழ்நிலையில் துயரம் அடைவது ஒத்துணர்வு ஆகும். இங்கே தாரையின் நிலையைக் கண்டதும் தாய்மார்களின் நினைவு வந்ததும் கண்கலங்கி விட்டான் அவன். கைம்பெண் கோலம் கொண்ட பெண்கள், தங்கள் கால் அடியும் முகமும் தவிர, மற்ற உடல் உறுப்புகள் எதுவும் தெரியாதபடிக் கழுத்துவரையும் துணியால் போர்த்திக் கொண்டிருப்பர். தாரை அங்ஙனம் காணப்பட்டாளாம். சிலர் முழுத்தலையும் தெரியாதபடி முக்காடு போட்டுக் கொள்வதும் உண்டு. இலக்குவன் பதில் நான்கு திங்கள் கழித்துத் தானையுடன் வந்து சீதையை மீட்க ஆவன செய்வோம் என்று சொல்லிய சுக்கிரீவன்