பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 215 குறித்த காலம் கடந்தும் வராத காரணம் என்ன என்று வினவி அவனது உள்ளக் கருத்தைத் தெரிந்து வரும்படி என்தமையன் ஏவியதால் வந்தேன் என்றான் இலக்குவன்(54). தாரையின் மறுமொழி தாரை இலக்குவனை நோக்கி, சிறியவர் தீமை செய்யின் நீ சினவாய் - சினம் ஆறுவாய் - உன்னைத் தவிர, இவ்வாறு அருளக் கூடியவர் வேறு யார் உளர். சுக்கிரீவன் கடமையை மறக்கவில்லை - பல இடங்கட்கும் சென்று சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு தூதர்கள் பலரை அனுப்பி யுள்ளான். தூதுவர் வந்து அறிவிப்பதை எதிர்பார்த்துக் கொண்டுள்ளான். அறிந்ததும் உடனே வந்துவிடுவான். நீங்கள் செய்த உதவிக்கு ஈடாக அவன் செய்யக்கூடிய பதில் உதவி உண்டோ - என்றாள். "சீறுவாய் அல்லை ஐய! சிறியவர் தீமை செய்தால் ஆறுவாய், அேலால் மற்றுஆருளர்; அயர்ந்தான்அல்லன் வேறுவேறு உலகம்.எங்கும் தூதரை விடுத்த எல்லை ஊறுமாநோக்கித் தாழ்ந்தான் உதவி மாறுதவி உண்டோ? (55) 'தம்பி அடித்தால்கூட அழாது. பொறுத்துக் கொள்ளும்’ என்று சிலர் திறமையாகப் பேசுவதுபோல், தாரை, இலக்குவன் சினவான் - அவனைப்போல் வேறுயாரும் இலர் என்று திறமையாகக் கூறி, சுக்கிரீவனது செயலுக்கும் தக்க காரணம் கற்பித்துத் திறமையாகப் பேசியுள்ளாள். நீங்கள் செய்த உதவிக்கு ஈடான பதில் உதவி உண்டோ எனவும் கூறினாள். "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது’ (101) என்னும் குறளின் கருத்தை, “உதவி மாறு உதவி உண்டோ” என்னும் தொடர் உள்ளடக்கியுள்ளது.