பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு யானை அன்னான் = இராமன். கமலத்தவள் = திருமகளின் தெய்வப் பிறவி (அவதாரம்) ஆகிய சீதை. பிரிந்து போனவரை நேரில் பார்க்க இயலாவிடினும் அவரது நிழல் படத்தையாவது (Photo) பார்த்து ஆறுதல் கொள்வ துண்டு. அத்தகைய உதவியையே அன்னம் முதலியன ஒரளவு செய்துள்ளனவாம். இவை இயற்கையாக இருப்பதை, இராமனுக்குக் காட்டுவதாகக் கம்பர் தன் குறிப்பை ஏற்றிக் கூறியிருப்பதால், இது தற்குறிப்பேற்ற அணியாகும். இராமன் இவற்றைக் காணுங்கால் சீதையின் நினைவு வந்தது என்பது குறிப்பு. பெரிய உதவி செய்ய முடியாவிடினும், தம்மால் இயன்ற உதவியாவது பிறர்க்குச் செய்ய வேண்டும் என்பதை இப் பாடல் குறிப்பாய் அறிவிக்கிறது. 'ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வா யெல்லாம் செயல்” (33) என்னும் குறளில் உள்ள 'ஒல்லும் வகை’, ‘செல்லும்வாய்' என்னும் தொடர்கள் ஈண்டு எண்ணத்தக்கன. நிழல் கொக்குகள் கம்பர் ஓர் அழகிய சுவையான கற்பனை செய்துள்ளார். அது: பொய்கைக் கரையில் உள்ள வஞ்சி மரத்தில் கொக்குகள் அமர்ந்து தம் சிறகுகளை உலர்த்திக் கொண் டிருந்தன. அவற்றின் நிழல் உருவம் படிகம்போல் தெளிந்த பொய்கை நீரில் தெரிந்தனவாம். அந்நிழல் உருவத்தைக் கண்ட மீன்கள், கொக்குகள் நீருள் புக்குத் தம்மைக் கவ்வ வந்திருப்பதாக எண்ணி அஞ்சினவாம். 'ஏலும் நீர்நிழல் இடையிடை எறித்தலின், படிகம் போலும் வார்புனல் புகுந்துளவாம் எனப் பொங்கி ஆலும் மீன்கணம் அஞ்சின அலமர, வஞ்சிக் கூலமா மரத்து இருஞ்சிறை புலர்த்துவ குரண்டம்' (19)