பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு 'சிறியவர் தீமை செய்தால் ஆறுவாய்' என்னும் பகுதியோடு, திருவாசகத்தில் உள்ள "பொறுப்பரன்றே பெரியோர் சிறுநாய்கள்தம் பொய்யினையே (நீத்தல் விண்ணப்பம்-6) "பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர்கடமை” (திருச்சதகம்-66) என்னும் பகுதிகளையும், வெற்றி வேற்கையில் உள்ள, "சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோ ராயின் பொறுப்பது கடனே' (31) என்பதும் ஒப்பு நோக்கத்தக்கன. சிறியவர் சிறு பிழை செய்யின் பொறுக்கலாம். சிறியோர் பெரும்பிழை செய்யின் பொறுக்கமுடியாது என்னும் கருத்தில், "சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின் பெரியோர் அப்பிழை பொறுத்தல் அரிதே' (32) என்று அதே வெற்றி வேற்கை கூறுகிறது. எனவேதான், இராம இலக்குவரால் பொறுக்க முடியவில்லை போலும். தாரை மேலும் கூறுகிறாள்: அரசு கொடுத்த உங்களையே சுக்கிரீவன் புறக்கணித்து விடின், அச்செயல் அவனை எளிதாய் விட்டுவிடுமா? இவ்வாறு செய்பவர்கள் ஏழு பிறவிகளிலும் வருந்துவர். "உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவ தொன்றோ இம்மையே வறுமை எய்தி - எழுமையும் இழப்பர் அன்றே' (58)