பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 217 கடமை மறந்தவர்கள் இப்பிறப்பிலும் வறுமை எய்தி வருந்துவர் - இனிவரும் ஏழு பிறவிகளிலுங்கூட வருந்துவர். இங்கே, 'ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு' (835) என்னும் குறள் கருத்து கையாளப்பட்டுள்ளது. "ஒருமையில் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து' (398) என்னும் குறளில் கல்வி ஏழு பிறப்புக்கும் உதவும் என்னும் கருத்து கூறப்பட்டுள்ளது. அதுபோலவே, தீமை செய்த வர்கள் ஏழு பிறவிகள் எடுத்து ஒவ்வொரு பிறப்பின் இறுதி யிலும் நரகத்துள் அழுந்துவராம். அனுமனின் திறன் இவ்வாறு தாரை கூற, சினம் ஆறிய நிலையில் இலக்குவன் இருந்தபோது, அனுமன் பதமாக - பக்குவமாக வந்து இலக்குவனிடம் மொழிகிறான்: ஐயனே! தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, பெண்கள், குழந்தை ஆகியோரை வதைத்தவர்க்கும் மாற்றக் கூடிய கழுவாய் (பிராயச் சித்தம்) உண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியைக் கொன்றவர்க்கு மட்டும் தப்பிக்கும் மாற்று வழி - கழுவாய் இல்லை. எனவே, நீங்கள் செய்த நன்றியை நாங்கள் மறப்போமா? "சிதைவகல் காதல் தாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப் பதவி அந்தணரை ஆவைப் பாலரைப் பாவை மாரை