பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றலாம் மாற்றம், மாயா உதவி கொன்றார்க்கு ஒன்றானும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?” (62) “ஒன்றானும்... உண்டோ’ என்பது, எந்த ஒரு வழியா லும் ஒழிக்க முடியாது என்னும் பொருளது, கொன்றார்க்கு', என்பது, நன்றியை மறப்பது, கொன்ற கொலைக் குற்றம் போன்றது என்னும் பொருளது. இந்தக் கருத்து, "எங்கன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை. செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110) என்னும் குறளை அடியொற்றி எழுந்த தாகும். மற்றும், 'ஆன்முலை அறுத்த அறன் லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை ய்ோர்க்கும் வழுவாய் மருங்கின் கழுவாயும் உளவென கிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே ஆயிழை கணவ” (34:1-7) என்னும் புறநானூற்றுப் பாடலும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. அறம் பாடியது என்பதில் உள்ள அறம் என்பது திருக்குறள் தானோ? இந்தக் குறள் திருக்குறள் அறத்துப் பாலில்தான் உள்ளது. இந்தக் கருத்து, சிவப்பிரகாச அடி களாரின் பிரபுலிங்க லீலை என்னும் நூலின் மருள சங்கர தேவர் கதி என்னும் பகுதியிலும், “தாய்க்கு வழுஇல் மகளிர்க்குத் தந்தை தன்க்குப் பசுவிற்குச் சேய்க்கு மறையோர் தமக்கு - இடர்செய் தீர்வுஇல் கொடிய பாதகம்’ (15) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.