பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 219 மேலும் அனுமன், ஐயனே! எங்கட்கு எல்லா நலங்களும் நீங்களே. நீங்கள் சினக்கின் எம்மைக் காப்பவர் யார்? சுக்கிரீவன் உதவியை மறக்க வில்லை. 'உதவாமல் ஒருவன்செய்த உதவிக்குக் கைம்மாறாக மற்றும் உண்டாக வற்றோ” (66) என்று கூறி இலக்குவனது சினத்தைத் தணித்தான். இலக்குவனின் மறுமொழி அனுமனே! நீங்கள் கடமையை மறந்து காலம் தாழ்த்தது மட்டும் செய்ய வில்லை. அதனால், இன்னும் சில காலம் அரக்கர்களை வாழச் செய்தீர், தேவர்கட்கு இன்னும் சில காலம் துன்பம் உண்டாகச் செய்தீர்; தி ஒம்பும் முனிவர்க்கு இன்னும் சில காலம் இடுக்கண் இருக்கச் செய்தீர்; பாவத்தை வளரச் செய்தீர்; இவை யெல்லாம் கிடக்க, - இதுவரையும் சினமே கொள்ளாத என் தமையன் இராமனைச் சினம் கொள்ளச் செய்தீர் - இது உங்கள் செயலால் முடிவாக ஏற்பட்ட தாகும் - என்றான் இலக்குவன், "தாழ்வித்தீர் அல்லீர் பன்னாள், தருக்கிய அரக்கர் தம்மை வாழ்வித்தீர், இமையோர்க்கு இன்னல். வருவித்தீர், மரபின் தீராக் கேள்வித் தீயாளர் துன்பம் கிளர்வித்தீர், பாவம் தன்னை மூள்வித்தீர், முனியா தானை முனிவித்தீர் முடிவின் என்றான்' (74) காலம் தாழ்க்காமல் இருப்பின், இ ந் நேர ம் இராவணனைக் கொன்றிருக்கலாம்; அதனால், மேற்கூறிய எல்லாத் தீமைகளும் நிகழாமல் காத்திருக்கலாம் - என்பது கருத்து. இதுவும் சுவையான ஒரு கருத்து வெளிப்பாடாகும்.