பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு பின்னர், சினம் தணிந்த இலக்குவனை அனுமன் சுக்கிரீவன்பால் அழைத்துச் சென்றான். தாரை மகளிர் குழாத்துடன் அகன்று விட்டாள். இலக்குவனது வருகையை அறிவிப்பதற்காக அங்கதன் சுக்கிரீவனிடம் சென்று, இலக்குவன் சீற்றத்தோடு வந்துள்ளான் எனக் கூறினான். சீற்றத்தோடு வரக் காரணம் யாது எனச் சுக்கிரீவன் வினவினான், இலக்குவன் வந்ததிலிருந்து இதுவரை நடந்தன அனைத்தையும் ஒன்று விடாமல் அங்கதன் கூறினான். என்னை எழுப்பியும் யான் எழாததற்குக் காரணம் கள்ளுண்ட களிப்பே யாகும் எனத் தன் குற்றத்தை உணர்ந்து கள்ளின் கொடுமையைக் கூறலானான்: மயக்குமேல் மயக்கு கள் உண்ணுதலினும் தாழ்ந்த செயல் வேறு இல்லை. கண் உண்டால் தாய் இவள் - மனைவி இவள் என்ற தெளிவும் இல்லாமல் போகும். அங்ஙனம் என்றால் அறநெறி என்னாகும். ஐம் பெருங் குற்றங்களுள் கள்ளும் ஒன்றா யிற்றே. நாம் இயற்கையாகவே உலகக் கட்டுகளில் மயங்கிக் கிடக்கிறோம். அந்த மயக்கத்தோடு கள்ளுண்ணும் மயக்கமும் சேர்ந்து கொள்ளின் நிலைமை என்னாகும்? 'ஏயின. இதுவலால் மற்று ஏழமைப் பால. தென்னோ தாய்இவள் மனைவி என்னும் தெளிவின்றேல் தருமம் என்னாம் தீவினை ஐந்தின் ஒன்று.இது அன்றியும் திருக்கு நீங்கா மாயையின் மயங்கு கின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்' (90) தீவினை ஐந்து = கொலை, களவு, கள், காமம், பொய் என்பன. மக்களின் உலகப் பிணிப்பு (பந்த பாசம்) இயற்கை யான மயக்கம். கள் உண்ணல் செயற்கையான மயக்கம்.