பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 221 நெருப்பில் நெய் தீ வினைகளை நீக்கியவர்கள் பிறப்பினின்றும் விடுபட்டு விடுபேறு அடைவர் எனப் பெரியோரும் நூல்களும் கூறி யுள்ளதை அறிந்தும், நெய்யைக் கொட்டி நெருப்பை அணைக்கின்றவரைப் போல், புழு பூச்சிகளை வடிகட்டிக் கள்ளை உண்டு இன்பம் பெற்றதாக எண்ணுகிறேன்: 'தெளிந்து தீவினையைச் செற்றோர் பிறவியின் தீர்வர் என்ன விளிந்திலா உணர்வி னோரும் வேதமும் விளம்ப வேயும் நெளிந்து உறை புழுவை நீக்கி நறவுண்டு கிறைகின் றேனால் அளிந்து அகத்தெரியும் தீயை நெய்யினால் அவிக்கின் றாரின்' (91) மதுவில் புழு நெளிகிறதாம். அரிசி முதற்கொண்டு எல்லா உணவுப் பொருள்களிலும் புழுக்கள் நெளிகின்றன எனில், மதுவில் நெளிவதற்குக் கேட்கவா வேண்டும்? புழுவை நீக்கி உண்பதாகச் சொல்கிறான். முதலில் உண்ணும்போது நீக்கலாம் - அடுத்துத் தொடர்ந்து உண்ணும்போது மயக்கம் மேலோங்குவதால் புழுவையும் சேர்த்து உண்பர். நான் மதுவால் இன்பம் பெறுவது நெய்யால் நெருப்பை அவிப்ப தாகும். நெய் நெருப்பை அணைக்காமல் மேலும் பெருகச் செய்வதுபோல், மது துன்பத்தை மேலும் மிகுவிக்கும். இவ்வாறு கள்ளின் கொடுமையைக் கூறி, அதனால்தான் கெட்டதற்கு வருந்திய சுக்கிரீவன், இலக்குவனை அழைத்து வரும்படி அங்கதனுக்குக் கூறித் தான் சுற்றத்தாருடன் இலக்குவனை வரவேற்க அரண்மனை வாயிலில் நின்றான்.