பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு விழாக் கோலம் இலக்குவன் கிட்கிந்தை நகருக்குள் வருகிறான் என்பதை அறிந்ததும், நகர் விழாக்கோலம் பூணப்பட்டது. கட்டடங் களின் பளிங்கால் ஆன சுவர்களிலும் மணிகள் பதித்த தூண் களிலும் மேலும்சில இடங்களிலும் இலக்குவனது உருவம் ஒரே நேரத்தில் பலவாகத் தெரிந்ததாம். இத் தோற்றம், வில் அம்புடன் ஆயிரம் போர் மறவர்கள் போர் புரிய வந்துள்ளனர் என்று எண்ணும்படிக் காணப்பட்டதாம்: "தூயதிண் பளிங்கின் செய்த சுவர்களில் தலத்தில் சுற்றி நாயக மணியிற் செய்த கனிநெடுந் தூணின் காப்பண் சாயை புக்குறலால் கண்டோர் அயர்வுற்க் கைவில் லோடும் ஆயிரம் மைந்தர் வந்தார் உளரெனப் பொலிந்த தவ்வூர் (100) இப்போதும் வீடுகளில் உருவம் தெரியும் கண்ணாடி களை ஒருவிதமாக அமைத்து வைத்துப் பல உருவங்கள் தோன்றுவதைக் காணலாம். சில கடைகளிலும் இதைக் காணலாம். திரையோவியக் காட்சிகளில் இது பேரிடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு அந்தக் காலத்திலேயே இருந்தது. என்பதை அறியும்போது வியப்பாயிருக்கிறது. புல்லணையும் மெல்லணையும் -

  • சுக்கிரீவன் இலக்குவனை எல்லா அரசச் சிறப்பு களோடும். வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று அரியணையைக் காட்டி அதில் அமரச் சொன்னான். அதற்கு இலக்குவன் உடன்படாமல், கல்மனக் கைகேசியால் மணிமுடி துறந்து காட்டிற்கு வந்து என் தமையன் புல்லணையில் தங்கியிருக்கும் இப்பொழுது, நான் மட்டும்