பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 223 மலரால் அணி செய்யப்பெற்ற இந்த மெல்லணையில் இருத்தல் முறையாகுமோ? என்றான். “கல்லணுை மனத்தினை உடைக் கைகேசியால் எல்லணி மணிமுடி துறந்த எம்பிரான் புல்லணை வைக,யான் பொன்செய் பூத்தொடர் மெல்லணை வைகலும் வேண்டுமோ என்றான்” (108) இலக்குவனை ஒத்த சிலர், இந்தக் காலத்திலும், தம் மைச் சேர்ந்தவர்கள் துன்பம் உற்றிருக்கும்போது. தாம் ஆடம்பரம் இன்றி இருப்பதைக் காணலாம். இதையும் 'ஒத்துணர்வு’ (Sympathy) என்னும் மனப் போக்காகக் (Tendency) Glåmårom Gurrub. இவ்வாறு கூறி இலக்குவன் கீழே கல் தரையிலேயே அமர்ந்தான். உயர்ந்த உணவு அருந்தும்படிச் சுக்கிரீவன் வேண்ட, என் தமையன் உண்ட காய்கனிகளின் எச்சமே என் உணவு எனக் கூறி மறுத்து விட்டான். - பின் சுக்கிரீவன், வெளியில் உள்ள படைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு நீ வருக என அனுமனுக்குத் கூறித்தான் இலக்குவனுடன் இராமன் இருக்கும் இடம் நேர்க்கிச் சென்றான். சிவிகையும் தேரும் இலக்குவன் தரையில் நடந்து சென்றதால், சுக்கிரீவனும் சிவிகை பின்னால் வரத் தாரணித் தேரின் சென்றானாம். 'வீரனுக்கு விளங்கு சேவடி பாரினிற் சேறலின், பரிதி மைந்தனும் தாரினின் பொலங்கழல் தழங்கத் தாரணித் தேரினில் சென்றனன் சிவிகை பின்செல" (123) வீரனுக்கு இளையவன்=இலக்குவன். பரிதி மைந்தன் = சுக்கிரீவன். சுக்கிரீவன் மன்னனாதலின் அவன் சிவிகையில்