பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு செல்லவேண்டும் என்பது மரபு - ஆனால், இலக்குவன் தரையில் நடப்பதால் தானும் தரையில் நடக்கிறான். அரச மரபு மாறா திருப்பதற்காகச் சிவிகையும் (பல்லக்கும்) பின்னே வந்துகொண்டிருக்கிறது. கால்களில் உள்ள கழல்கள் ஒலிக்கச் சுக்கிரீவன் 'தாரணித் தேரினில் சென்றனன்’ என்று பாடிக் கம்பர் நம்மை திகைக்கச் செய்துள்ளார். பல்லக்கில் கூடச் செல்லாதவன் தேரில் செல்வது எவ்வாறு? இங்கே தார் அணித்தேர் என்பது, மலர்ச்செடிகொடிகள் அணியாக உள்ள பூமியாகிய தேர் ஆகும். பூமியைத் தேர் என்றது எவ்வாறு? சிவன் முப்புரங்களை அழிக்க, மேரு மலையை வில்லாகவும் வாசுகிப்பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் பூமியைத் தேராகவும் கொண்டார் என்பது ஒரு புராணக்கதை. இந்தக் கதையின் அடிப்படையில், சுக்கிரீவன் தரையில் (பூமியில்) சென்றான் என்பதற்குப் பதிலாகத் தேரினில் சென்றான் என்று பாடினார் கம்பர். ஒரு கற்பனைச் சுவையாகும் இது. படைகள் பின்னே தங்க, அங்கதன் விலகி நிற்க, சுக்கிரீவன் தன் அன்பு முன்செல்ல அந்த அன்புக்குப் பின்னே நடந்து சென்று இராமனை அடைந்து அவனது க்ால்களில் விழுந்து வணங்கினான். . . இராமன் வினவல் இராமன் சுக்கிரீவனைத் தழுவி அமரச் செய்து, உன் அரசும் ஆணையும் செம்மையுற நடக்கின்றனவோ - உனது ஆட்சியாகிய குட்ை நிழலில், பல உயிர்களும் வெப்ப மின்றிக் குளிர்ச்சியாய் உள்ளனவோ என வினவினான்.